டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாட்டில் 5 ஆண்டுகளில்...கடன் வாங்கி கட்டாமல்...தப்பி ஓடியவர்கள் 38 பேர்!!

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 38 பேர் தப்பி ஓடியுள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் வங்கிகளில் கடன் பெற்றுக் கொண்டு கட்டாமல் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடியவர்களின் விவரங்களை கொடுக்க முடியுமா என்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் கேட்டு இருந்தார்.

Central Govt informed 38 wilful defaulters fled India in last 5 years

இதற்கு நேற்று (திங்கள் கிழமை) மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் எழுத்துபூர்வமாக பதில் அளித்து இருந்தார். அவர் அளித்திருந்த தகவலில், ''விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சி உள்பட 2015 ஜனவரி 1ஆம் தேதி முதல் 2019 டிசம்பர் 31 ஆம் தேதி வரை மொத்தம் 38 பேர் வங்கியில் பணம் பெற்று கட்டாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியுள்ளனர்.

இவர்கள் மீது வழக்கு தொடுத்து விசாரித்து வரும் சிபிஐ இதுகுறித்து அளித்த பதிலில் இவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர் என்று தெரிவித்துள்ளது. சட்டத்தின்படி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொருளாதார குற்றம் செய்து நாட்டை விட்டு தப்பி ஓடியவர்களை திரும்பவும் நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து பல்வேறு நாடுகளுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

உசுப்பேத்துனா உம்முனு.. கடுப்பேத்துனா கம்முனு இருக்கணும்.. விஜய் வசனத்தை பின்பற்றும் ரசிகர்கள் உசுப்பேத்துனா உம்முனு.. கடுப்பேத்துனா கம்முனு இருக்கணும்.. விஜய் வசனத்தை பின்பற்றும் ரசிகர்கள்

இவர்களில் 11 பேர் மீது பொருளாதார குற்றத்தின் கீழ் தப்பி ஓடியவர்கள் என்று அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடத்த 2019 ஆம் ஆண்டில் ஜனவரியில் இருந்து 2019 டிசம்பர் வரை மட்டும் நாட்டில் இருந்து 11 பொருளாதார குற்றவாளிகள் தப்பி ஓடியுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.

English summary
Central Govt informed 38 wilful defaulters fled India in last 5 years
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X