ஊபர், ஓலா நிறுவனங்களுக்கு பறந்த நோட்டீஸ்.. ஆட்டோ, டாக்ஸி கட்டணங்களில் மோசடி? மத்திய அரசு அதிரடி
டெல்லி: ஊபர், ஓலா நிறுவனங்கள் ஒவ்வொரு செல்போனிலும் ஒவ்வொரு கட்டணத்தைக் காட்டுவதாகப் பலரும் குற்றஞ்சாட்டினர். மேலும், இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்களையும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து புகார் அளித்திருந்தனர். இதையடுத்து இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு ஊபர், ஓலா நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த காலத்தில் நாம் ஆட்டோ, கார் என எதுவாக இருந்தாலும் செயலி மூலமாகவே நாம் புக் செய்கிறோம். நேரில் ஓவர் ரேட் கேட்பார்கள் என்பதாலேயே செயலி மூலம் நாம் புக் செய்கிறோம்.

மத்திய அரசு நடவடிக்கை:
ஆனால், செல்போன்களை பொறுத்துக் கூட கட்டணம் மாறுபடுவதாகப் பலரும் புகார் அளித்திருந்தனர். குறிப்பாக ஐபோன்களை வைத்திருப்போருக்கு மட்டும் அதிக கட்டணம் காட்டுவதாகச் சொல்லப்பட்டது. இதற்கிடையே மத்திய அரசு இப்போது இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக ஊபர் மற்றும் ஒலா நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில்,"ஒருவர் பயன்படுத்தும் செல்போன் (iPhones/ Android) மாடல்களை அடிப்படையாக வைத்து வெவ்வேறு கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதாகப் புகார் வந்த நிலையில், இது தொடர்பாகப் பதிலளிக்க நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
புகார் என்ன:
ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல ஒரே நேரத்தில் புக் செய்ய முயலும் போதும் ஆண்டிராய்டு சாதனங்களில் ஒரு கட்டணமும் ஐபோன்களில் ஒரு கட்டணமும் காட்டுவதாகப் புகார் எழுந்தது. பயணிக்கும் தொலைவு, பிக்அப் டிராப் இடம், புக் செய்யும் நேரம் என எல்லாமே ஒரு மாதிரி இருந்தாலும் ஐபோன் என்பதாலேயே அதில் அதிக கட்டணம் வசூலிப்பது சரியான போக்கு இல்லை என்று பலரும் சமூக வலைத்தளங்களில் புகார் அளித்தனர். மேலும், இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்களையும் அவர்கள் பகிர்ந்தனர்.
நோட்டீஸ்
இந்தச் சூழலில் தான் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நுகர்வோரின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், நியாயமான முறையில் கட்டணத்தை நிர்ணயம் செய்வதை உறுதி செய்யவும் இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டிராய்டில் ஒரு கட்டணம், ஐபோன்களில் ஒரு கட்டணம் என வர என்ன காரணம் என்பது குறித்து இந்த நிறுவனங்கள் விளக்கம் தர வேண்டும்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து மத்திய அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் எனத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐபோன்களை வைத்திருக்கிறார்கள் என்பதற்காக மட்டும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது சரியான போக்கு இல்லை என்றும் பலரும் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.
முதல்முறை இல்லை:
அதேநேரம் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக ஐபோன்களில் புதிய அப்டேட் வந்த பிறகு அதன் பேட்டரி திறன் குறைந்ததாகப் பலரும் புகார் அளித்தனர். இது தொடர்பாகவும் நிறுவனத்திடம் நுகர்வோர் பாதுகாப்புத் துறை விளக்கம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications