கிட்டத்தட்ட 80% பேர் முன்னேறிய சாதியினர் தான்! உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்து மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் உள்ள நீதிபதிகள் குறித்த விவரம் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. அதில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் சுமார் 80% நீதிபதிகள் முன்னேறிய சாதிகளைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். வெறும் 20% மட்டுமே எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 முதல் ஜனவரி 2026 வரையிலான காலகட்டத்தில் இந்திய நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குறித்து திமுக எம்பி வில்சன் ராஜ்யசபாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறைக்கான மத்திய இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.

மத்திய அரசு பதில்
அதில் இந்திய உயர் நீதிமன்றங்களில் 2021 முதல் ஜனவரி 2026 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 593 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்களில் 26 பேர், பழங்குடியினர் பிரிவில் இருந்து 14 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்தும் 80 பேரும் நியமிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக எம்பி பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு, அர்ஜுன் ராம் மேக்வால் ராஜ்யசபாவில் அளித்த எழுத்துப்பூர்வமாகப் பதிலில் மேலும், "2021 ஜனவரி 1 முதல் 2026 ஜனவரி 30 வரை நியமிக்கப்பட்ட 593 நீதிபதிகளில், 26 பேர் எஸ்.சி. பிரிவினர், 14 பேர் எஸ்.டி. பிரிவினர், 80 பேர் ஓ.பி.சி. பிரிவினர், 37 பேர் சிறுபான்மையினர் ஆவர். அதே காலகட்டத்தில், 96 பெண்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
யாருடைய பொறுப்பு?
மேலும், நீதிபதிகள் நியமனத்திற்கான நடைமுறை ஒப்பந்தத்தின்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கான பரிந்துரைகளை அளிக்கும் பொறுப்பு இந்தியத் தலைமை நீதிபதியிடமும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனப் பரிந்துரைகளை அளிக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளிடமும் உள்ளது என்றும் அவர் தனது பதிலில் தெரிவித்தார்.
அவர் மேலும், "நீதித் துறையில் சமூகப் பன்முகத்தன்மையை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது.. உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கான பரிந்துரைகளை அனுப்பும்போது, பட்டியல் சாதிகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் ஆகியோரைச் சேர்ந்த தகுதியான நபர்களைக் கவனமாகப் பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை அரசு தொடர்ந்து கேட்டு வருகிறது" என்று மேக்வால் தனது பதிலில் தெரிவித்தார்.
கேள்வி
இது நீதித்துறையில் பன்முகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. பல்வேறு சமூக ஆர்வலர்களும் எதிர்க்கட்சியினரும் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். திமுக எம்பி பி. வில்சன் இந்தப் பதிலைத் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரின் 'மோசமான பிரதிநிதித்துவம்' குறித்து தனது வருத்தத்தைப் பதிவு செய்தார்.
நீதிபதிகள் நியமனத்தில் பன்முகத்தன்மை இல்லாதது அதிர்ச்சி அளிப்பதாகக் கூறிய பி. வில்சன், இது கவலைக்குரிய போக்கு எனக் குறிப்பிட்டார். அவர் மேலும், "அரசியலமைப்பின் 76வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். ஆனால், நமது இந்தியாவின் பன்மைத்துவச் சமூகத்தை நீதித்துறை பிரதிபலிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் சில சமூகங்கள் குறைவான பிரதிநிதித்துவத்துடன் உள்ளன. உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனச் செயல்முறைகளில் பாகுபாடு உள்ளது" என்றார்.
கிட்டத்தட்ட 80% முன்னேறிய பிரிவினர்
உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 4.38% மட்டுமே எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர்களாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், எஸ்.டி. பிரிவில் இருந்து வெறும் 2.36% பேரும், ஓ.பி.சி. பிரிவில் இருந்து 13.49% மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்தார். அதேநேரம் 79.76% நீதிபதிகள் முன்னேறிய ஜாதியினராகவே இருப்பதாகவும் வில்சன் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் மட்டுமே அதிகம்
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களைத் தவிர மாவட்ட மற்றும் இதர நீதிமன்ற நீதிபதிகள் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளது. அதில் தமிழகத்தில் மட்டுமே பன்முகத்தன்மை போதியளவில் இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 1234 நீதிபதிகள் இருக்கும் சூழலில், அதில் எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவில் இருந்து மொத்தம் 1205 நீதிபதிகள் உள்ளனர். அதாவது மொத்த நீதிபதிகளில் 97.65% எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவில் இருந்து உள்ளனர்.
ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 2640 நீதிபதிகள் உள்ள நிலையில், அதில் 1414 மட்டுமே எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். அதாவது 53% மட்டுமே எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவினர். அதேபோல மகாராஷ்டிராவில் மொத்தம் 1940 நீதிபதிகள் உள்ள நிலையில், அதில் 734 பேர் மட்டுமே எஸ்சி/எஸ்டி/ஓபிசி. அதாவது 37% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications