பகீர் கிளப்பும் பறவை காய்ச்சல்.. கேரளாவில் கூட கேஸ் இருக்காம்.. மத்திய அரசு புதிய அலர்ட்! ஏன் ஆபத்து
டெல்லி: நமது நாட்டில் பறவை காய்ச்சல் நிகழ்வுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மாநில அரசுகள் தங்கள் நோய் கண்காணிப்பை அதிகரிக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
நமது நாட்டில் இப்போது ஆங்காங்கே பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. இதற்கிடையே மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பறவை காய்ச்சல் தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இனை நோய்கள் உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் இந்த பறவை காய்ச்சலால் மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளலாம் என்பதால் அவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
மத்திய அரசு: இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறுகையில், "பருவகால காய்ச்சல் மற்றும் பறவைக் காய்ச்சல் ஆகிய இரண்டும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், நாங்கள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இப்போது நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டில் இருக்கிறது.. யாரும் அச்சப்படத் தேவையில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல் எனப்படும் எச்1என்1 பாதிப்புகளைக் கையாளும் சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போட்டுள்ளதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பரவும் பறவை காய்ச்சல்: நமது நாட்டில் ஜார்கண்ட் போன்ற சில மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பறவை காய்ச்சல் காரணமாக ஒரு இடத்தில் அமைந்துள்ள கோழிப்பண்ணையின் இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஆறு ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 1,745 கோழிகள், 450 வாத்துகள் மற்றும் 1,697 முட்டைகள் அழிக்கப்பட்டுள்ளன. கேரளாவின் ஆலப்புழாவிலும் இரண்டு இடங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
A(H5N1) வைரஸ் எனப்படும் ஆசிய ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் முக்கியமாகப் பறவைகளிடையே தான் பரவுகிறது என்றாலும் கூட அவை அரிய சந்தர்ப்பங்களில் மனிதர்களுக்கும் பரவுகிறது. ஏற்கனவே இந்த வைரஸ் பாதிப்பு இருக்கும் பறவைகளுடன் தொடர்பு கொள்ளும் போது மனிதர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
உலகெங்கும் நிலைமை மோசம்: ஏற்கனவே இந்த சீசனில் உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் கண்டறியப்பட்டதாகத் தகவல் வந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. இதைத் தொடர்ந்தே நமது நாட்டில் தற்போது நிலவும் சூழல் குறித்து ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்தே மத்திய அரசு நிலைமை கட்டுக்குள் இருப்பதாகச் செய்திக்குறிப்பை வெளியிட்டது.
இந்த பறவை காய்ச்சல் எப்போதும் பறவைகளில் இருந்து மட்டுமே மனிதர்களுக்குப் பரவும். ஆனால், சமீபத்திய காலங்களில் அவை பாதிக்கப்பட்ட மனிதரிடம் இருந்து கூட நேரடியாக மற்றவர்களுக்குப் பரவும் சம்பவங்கள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்த பறவை காய்ச்சல் நேரடியாக வைரசால் பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்குப் பரவ வாய்ப்பு இல்லை என்றே கூறியுள்ளது.
எச்சரிக்கை தேவை: மேலும், முறையாகச் சமைக்கப்படாத பாலை எடுத்துக் கொண்டால் அது A(H5N1) வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கொதிக்கவைக்கப்பட்ட பாலை மட்டுமே பயன்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பும் கேட்டுக் கொண்டுள்ளது. காய்ச்சிய பாலை பயன்படுத்துவது, இறைச்சியை முறையாக சமைத்து அதன் பின்னர் சாப்பிடுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினால் வைரஸ் பாதிப்பைத் தடுக்கலாம் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மறுபுறம், பருவகால காய்ச்சலும் அதிகரிக்கும் நிலையில், அது குறித்தும் மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பருவகால காய்ச்சல் நிலைமையை மத்திய சுகாதார அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.. நிலைமை கட்டுக்குள் இருப்பதால் இப்போது கவலைப்படத் தேவையில்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications