அவசர காலத்தில்.. மொபைல் நெட்வொர்க்கை அரசு கைப்பற்றலாம்.. லோக்சபாவில் வரைவு மசோதா அறிமுகம்
டெல்லி: அவசர காலங்களில் பொது பாதுகாப்பு கருதி எந்த ஒரு மொபைல் நெட்வொர்க்கையும் அரசு கையகப்படுத்த வகை செய்யும் வரைவு மசோதா இன்று லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக லோக்சபாவில் நடந்த பாதுகாப்பு குறைபாடு அவையில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இதுவரை கிட்டதட்ட 92 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனார்.

இந்த பரபரப்புக்கு இடையே, லோக்சபாவில் தொலைதொடர்பு மசோதா 2023 இன்று அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்த இந்த வரைவு மசோதாவில், எந்தவொரு தொலைதொடர்பு சேவை அல்லது தொலைதொடர்பு நெட்வொர்க்கை தற்காலிக அடிப்படையில் மத்திய அல்லது மாநில அரசு கையகப்படுத்தி கொள்ள முடியும் என்ற அம்சம் இடம் பெற்றுள்ளது.
அதாவது, பேரிடர் மேலாண்மை உள்பட எமெர்ஜென்சி காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, மத்திய அல்லது மாநில அரசு தேவைப்பட்டால் எந்தவொரு தொலைதொடர்பு சேவையை அல்லது தொலைதொடர்பு நெட்வொர்க்கை கைவசப்படுத்தி கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications