வருமான வரி தாக்கல் செய்ய மேலும் கால நீட்டிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசத்தை மேலும் நீட்டித்து டிசம்பர் 31ம் தேதி என, வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், மத்திய அரசு வருமான வரி செலுத்தும் காலக்கெடுவை நீட்டித்தது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு அக்டோபர் 31ம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

Centre extends time for filing income tax return for FY20 till December 31

இந்த நிலையில், தங்கள் கணக்குகளை தணிக்கை செய்து வருமான வரி செலுத்துபவர்களுக்கான ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து கால அவகாசம் வழங்கி மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வரி தணிக்கை அறிக்கை, சர்வதேச மற்றும் உள்நாட்டு பரிவர்த்தனை தொடர்பான அறிக்கை உள்ளிட்டவற்றை தணிக்கை செய்து அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ரூ.1 லட்சம் வரை சுய மதிப்பீட்டு வரி செலுத்த வேண்டியவர்களுக்கு, வரி செலுத்தும் தேதி அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+