6 நாடுகளுக்கு! 5 மாதங்களுக்கு பிறகு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி
டெல்லி: இலங்கை, வங்கதேசம் உள்பட 6 நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு விளையும் வெங்காயம், நாட்டின் பிற மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆனால் முந்தைய ஆண்டுகள விட கடந்த ஆண்டு வெங்காய உற்பத்தி குறைந்தது. இதனால் இந்தியாவிலேயே வெங்காயத்தின் தேவை அதிகம் இருந்தது. இதனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது.
இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர். இதையேற்ற மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளது.
மேலும் வெங்காய ஏற்றுமதி தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலம் நடைபெறும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூடான், பஹ்ரைன், மொரீஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு 99 ஆயிரத்து 150 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது.
சுமார் 5 மாதங்கள் கழித்து 6 ஆண்டுகள் முந்த்ரா துறைமுகம், பிபாவாவ் துறைமுகம், ஜேஎன்பிடி துறைமுகம் வழியாக மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு 2 ஆயிரம் மெட்ரிக் டன் வெள்ளை வெங்காயம் ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications