மகாதேவ் சூதாட்ட செயலி உள்பட 22 செயலிகள் முடக்கம்.. மத்திய அரசு அதிரடி ஆக்ஷன்!
டெல்லி: மகாதேவ் சூதாட்ட ஆப் (செயலி) உரிமையாளர்களிடம் இருந்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் (காங்கிரஸ்) ரூ508 கோடி பணம் பெற்றார் என அமலாக்கத்துறை திடுக்கிட வைக்கும் குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தது. இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில், மகாதேவ் சூதாட்ட செயலியை மத்திய அரசு முடக்கியுள்ளது.
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். பாஜகவைப் பொறுத்தவரையில் கணிசமான இடங்களைப் பெற்றாலும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

இந்நிலையில் வட இந்தியாவில் பிரபலமான மகாதேவ் சூதாட்ட செயலி மீதான நடவடிக்கைகளை அமலாக்கத்துறை அதிரடியாக மேற்கொண்டது. இந்த சோதனைகளின் போது கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான கார் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் ரூ5.86 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. சத்தீஸ்கர் மாநில தேர்தல் செலவுகளுக்காக முதல்வர் பூகேஷ் பாகலிடம் கொடுக்க வைத்திருந்த பணம் இது எனவும் சிக்கிய ஆசிம் தாஸ் என்பவர் வாக்குமூலம் கொடுத்ததாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
மேலும் சத்தீஸ்கர் போலீஸ் கான்ஸ்டபிள் பீம் யாதவ் என்பவரையும் இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்தனர். இந்த விசாரணைகளின் போது பீம் யாதவ், கடந்த 3 ஆண்டுகளில் அரசின் அனுமதி இல்லாமல் துபாய்க்கு பல முறை சென்றதும் அங்கு மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்கள் ரவி உப்பால், சவுரப் சந்திரசேகர் ஆகியோரை சந்தித்ததாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
பீம் யாதவின் பயண செலவுகள் அனைத்தும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இவ்வாறாக சத்தீஷ்கர் அரசியலில் பெரும் புயலையே மகாதேவ் சூதாட்ட செயலி ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மகாதேவ் சூதாட்ட செயலி உள்பட 22 சட்டவிரோத சூதாட்டச் செயலிகள் மற்றும் இணையதளங்களைத் தடை செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு மகாதேவ் புக்கிங் செயலி முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு கிளம்பியிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications