"லாக்டவுன் சரியான நேரத்தில் பயனுள்ள முடிவு".. ஒரு வேளை ஊரடங்கு இல்லாட்டி இந்தியா என்னவாகியிருக்கும்!
டெல்லி: நாடு முழுவதும் லாக்டவுன் என்பது சரியான நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் அவ்வாறு அறிவிக்காவிட்டிருந்தால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சமாக இருந்திருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தி வருவதாக மத்திய அரசு கூறுகிறது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கிறது. லாக்டவுன் அமல்படுத்தியது, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது, தீவிர கண்காணிப்பு நெட்வொர்க்கை ஏற்படுத்தியது ஆகியவையே காரணம்.

பொருளாதாரம்
லாக்டவுன் தளர்த்தப்பட்டவுடன், பொருளாதாரத்தை மீட்வது குறித்தும் மக்களின் துயரை துடைப்பது குறித்தும் சுகாதாரத் துறையின் செயல்பாடுகளை மேலும் அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகளை வழங்க 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து நிதி ஆயோக்கின் உறுப்பினர் விகே பால் கூறுகையில் லாக்டவுன் மூலம் கொரோனா வைரஸ் பரவலின் வேகத்தை குறைத்து விட்டோம். இல்லாவிட்டால் இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருக்கும்.

சரியான நேரம்
இந்த லாக்டவுன் மிகவும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட பயனுள்ள முடிவு என்பதை கொரோனா பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்தே தெரிகிறது. ஒரு வேளை நாம் இந்த லாக்டவுன் முடிவு எடுக்காமலும் பின்பற்றாமலும் இருந்திருந்தால் இன்று கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சமாக இருந்திருக்கும் என்றார்.

ரத்த மாதிரிகள்
இதுகுறித்து தேசிய நோய் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் எஸ் கே சிங் கூறுகையில் கண்காணிப்பு என்பதுதான் கொரோனாவுக்கு எதிரான மிகப் பெரிய ஆயுதமாகும். இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டவுடன் கண்காணிப்பை தொடங்கிவிட்டோம். தற்போது வரை கொரோனா இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 9.45 லட்சம் பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

14 நாட்கள்
கடந்த 28 நாட்களில் 15 மாவட்டங்களுக்கு மேல் புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. கடந்த 14 நாட்களில் 80 மாவட்டங்களில் புதிய கொரோனா பாதித்தோர் இல்லை என சுகாதாரத் துறையின் இணை செயலாளர் தெரிவித்துள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications