மத்திய அரசு ஊழியர்களுக்கு வருத்தமான செய்தி.. அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு
டெல்லி: கொரோனா பணிக்காக மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் அகவிலைப்படி உயர்வு மட்டுமே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றும் பழைய முறையில் 17% என்ற அளவில் அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசுப்பணியில் உள்ள ஊழியர்கள், மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020-21ம் நிதியாண்டில், 1.13 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 முதல் 21 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு வழங்க, கடந்த மார்ச் 13ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது. இதற்காக, மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.14,510 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென பரவிய கொரோனா வைரஸ் தொற்று அகவிலைப்படி உயர்வில் கைவைத்துவிட்டது. ஆம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு கடுமையான முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு ஏரளாமான நிதி தேவைப்படுவதால் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எம்பிக்களின் ஊதியம் குறைப்பு, எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது அந்த வரிசையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கு கடந்த 01.01.2020 முதல் வழங்கப்பட வேண்டிய நான்கு சதவீத அகவிலைப்படி வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜூன் 2020 மற்றும் ஜுலை 20 அகவிலைப்படி உயர்வு தொகை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜுலை வரையிலான அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஆண்டில் அமலில் இருந்து .பழைய முறையில் 17% என்ற அளவிலேயே அகவிலைப்படி தொடரும் என்றும் தொடர்ந்து அகவிலைப்படி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
பொதுவாக மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1முதல் நடைமுறைக்கு வருவது வழக்கம். அதாவது ஏப்ரல் மாதம் புதிய திருத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வுடன் கூடிய சம்பளமும், ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத அரியர்களும் சேர்த்து வழங்கப்பட்டு வரும். இந்நிலையில், ஏப்ரல் மாத சம்பளம் வழங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரியர் தொகை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக உற்பத்தி முடங்கி தொழில்கள் நடைபெறாததால் அரசுக்கு வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசு கொரோனா தடுப்பு பணிக்காக பல்லாயிரம் கோடிகள் செலவு செய்வதால் நிறுத்தப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications