உ.பி. தேர்தல்: OBC ஓட்டுகளை அள்ள பிளான்! இடஒதுக்கீட்டுக்கான கிரீமிலேயரில் வருகிறது திருத்தம்!
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC ஓபிசி) வாக்குகளை அறுவடை செய்யும் வகையில் ஓபிசி இடஒதுக்கீட்டுக்கான வருமான வரம்பில் (கிரீமிலேயர்) திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
1999-ம் ஆண்டு மத்திய அரசு பணிகளில் ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட்டது. இந்த 27% இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கிரீமிலேயரும் இடஒதுக்கீடும்
இதுதான் மண்டல் கமிஷன் வழக்கு அல்லது இந்திரா சஹானி வழக்கு எனப்படுகிறது. இவ்வழக்கில் ஓபிசியினருக்கு 27% இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து யார் யார் ஓபிசி இடஒதுக்கீட்டைப் பெற முடியாது என்பதற்கான கிரீமிலேயர்- வருமான வரம்பும் நிர்ணயிக்கப்பட்டது. அதாவது ஓபிசி அனைவருமே 27% இடஒதுக்கீடு உரிமையை அனுபவிக்க முடியாது.

கிரீமிலேயர் என்பது என்ன?
ஓபிசியில் கிரீமிலேயர் என்கிற வசதி படைத்தவர்களை அடையாளம் கண்டு அவர்களைத் தவிர எஞ்சியவக்ரளுக்கு மட்டும்தான் 27% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு ரூ1 லட்சத்துக்கு கூடுதலாக வருமானம் பெறுகிறவர்களின் பிள்ளைகளுக்கு 27% இடஒதுக்கீடு உரிமை இல்லை என முதலில் கிரீமிலேயர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில் இத்தகைய வருமான வரம்பை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தம் செய்ய வேண்டும் என்பதும் விதி.

இதுவரை திருத்தங்கள்
ஆனால் 1993-க்குப் பிறகு 2004-ல் இந்த வருமான வரம்பானது ரூ4.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. 2013-ம் ஆண்டு ரூ6 லட்சமாகவும் 2017-ல் ரூ8 லட்சமாகவும் இது உயர்த்தப்பட்டது. இந்த வருமான வரம்பை ரூ15 லட்சம் என நிர்ணயிக்க வேண்டும் என்பது பொதுவாக கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகிற கோரிக்கை. மத்திய பாஜக அரசு இந்த கிரீமிலேயர் முறை குறித்து ஆலோசித்து பல்வேறு மாற்றங்களை செய்யவும் முயற்சித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

தேர்தலுக்காக மத்திய அரசு திடீர் முடிவு?
இந்நிலையில் தற்போதைய வருமான வரம்பு ரூ8 லட்சத்தை ரூ12 லட்சமாக உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி.யில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்களது வாக்குகளை அறுவடை செய்யும் வகையில் அம்மாநில தேர்தல் நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்னதாகவே மத்திய அரசு இது தொடர்பான முடிவை அறிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications