இலங்கை பொருளாதார, அரசியல் நெருக்கடி- டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம்- தலைவர்கள் பங்கேற்பு!
டெல்லி: இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக டெல்லியில் மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரம் பேரழிவை எதிர்கொண்டிருப்பதால் கடந்த 6 மாத காலமாக அந்நாட்டில் மக்கள் இடைவிடாமல் போராடி வருகின்றனர். மக்களின் இந்த கிளர்ச்சியால் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சேவும் ராஜினாமா செய்தனர். மேலும் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் இடைக்கால அனைத்து கட்சி அரசாங்கம் அமைந்தது.

இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதனால் தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார். தற்போது இலங்கையில் அவசர நிலையை ரணில் விக்கிரமசிங்கே அமல்படுத்தி உள்ளார்.


Recommended Video

இன்னொரு பக்கம், பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை அரசு இடைவிடாமல் நிதி உதவி பெறுவதில் தீவிரம் காட்டுகிறது. மத்திய அரசும் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனுதவிகளை இலங்கைக்கு வழங்கி உள்ளது. தமிழ்நாடு அரசும் அனைத்து இலங்கை மக்களுக்கும் நிவாரணப் பொருட்களை அனுப்பி உள்ளது.

இந்த பின்னணியில் இலங்கை விவகாரங்கள் குறித்தும் இலங்கை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு இன்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் தலைமை வகிக்கின்றனர்.













Click it and Unblock the Notifications