கோவா பழங்குடிகளுக்கு தனி சட்டசபை தொகுதி: நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசின் புதிய மசோதா தாக்கல்!
டெல்லி: கோவா மாநிலத்தில் பழங்குடிகளுக்கு தனி சட்டசபை தொகுதிகளை உருவாக்குவது தொடர்பான மத்திய அரசின் புதிய மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், கோவா மாநில சட்டசபை தொகுதிகளில் பட்டியல் பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைக்க வகை செய்யும் மசோதாவை இன்று தாக்கல் செய்ய உள்ளார்.
கோவா மாநிலத்தில் 2011 கணக்கெடுப்பின் அடிப்படையில் மொத்த மக்கள் தொகை 14.58 லட்சம். இதில் தலித்துகள் (எஸ்சி SC) 25,449 பேர். பழங்குடிகள் எண்ணிக்கை 1,49,275. கோவாவின் பெர்னெம் சட்டசபை தொகுதி தனித் தொகுதியாக தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பழங்குடிகளுக்கான சட்டசபை தொகுதி எதுவும் இல்லை.

லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக கோவா சட்டசபையில் பழங்குடிகளுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க தனி சட்டசபை தொகுதியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை விஸ்வரூபம் எடுத்தது. தங்களுக்கு தனி சட்டசபை தொகுதியை உருவாக்காவிட்டால் லோக்சபா தேர்தலையே புறக்கணிப்போம் என்றும் பழங்குடிகள் எச்சரித்திருந்தனர்.
இதனால் கடந்த மார்ச் மாதம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், கோவா மாநில சட்டசபை தொகுதிகளில் பட்டியல் பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைக்க வகை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் தரப்பட்டது. மத்திய அரசின் மசோதாவில், கோவா மாநிலத்தில் உள்ள பழங்குடியினரின் அரசியலமைப்பு உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, 2008-ம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதி மறுவரையறை ஆணையில் திருத்தங்கள் செய்வதற்கும், கோவா மாநிலத்தின் சட்டசபையில் உள்ள இடங்களை மாநிலத்தின் பட்டியலில் உள்ள பழங்குடியினருக்கு மறுசீரமைப்பு செய்வதற்கும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் ஒரு சட்டம் இயற்றுவது இன்றியமையாததாகும். கோவா சட்டசபை தொகுதிகளை மறுசீரமைப்பதன் மூலம் கோவா சட்டசபையில் பட்டியல் பழங்குடியினருக்கு முறையான பிரதிநிதித்துவம் அளிக்கும் நோக்கத்திற்காக நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணை, 2008 இல் தேவையான திருத்தங்களைச் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு இது அதிகாரம் அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, கோவாவில் 3 ஜாதிகளை பழங்குடிகள் பட்டியலில் சேர்த்து தனி சட்டசபை தொகுதியை உருவாக்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இந்த மசோதாவைத் தாக்கல் செய்ய உள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications