ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து தக்காளி கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு!
டெல்லி: ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தக்காளி கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சில்லறை விற்பனை நிலையங்களில் சலுகை விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.
நாடு முழுவதும் தக்காளி விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசு தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோல மத்திய அரசிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கோரிக்கை வைத்திருந்தார்.

இதனையடுத்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை: கடந்த மாதம் தக்காளியின் சில்லறை விலை அதிகபட்சமாக இருந்த முக்கிய பயன்பாட்டு மையங்களில் விநியோகிப்பதற்காக, ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் மண்டிகளிலிருந்து அவற்றைக் கொள்முதல் செய்யுமாறு தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பிற்கும், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பிற்கும் நுகர்வோர் விவகாரங்கள் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை அளவில் டெல்லி தேசிய தலைநகர் பகுதியில் உள்ள நுகர்வோருக்கு சில்லறை விற்பனையகங்கள் வாயிலாக சலுகை விலையில் தக்காளி விநியோகிக்கப்படும்.
கடந்த ஒரு மாதத்தில் தேசிய சராசரி அளவைவிட கூடுதலான விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட மையங்களின் அடிப்படையில் இந்த தேர்வு அமைந்துள்ளது.
பெரும்பாலும் அனைத்து மாநிலங்களிலிருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டாலும், ஒட்டுமொத்த உற்பத்தியில் 56 சதவீதம் முதல் 58சதவீதம் பங்களிப்பை தெற்கு மற்றும் மேற்கு இந்தியா வழங்குகிறது. அதிக மாநிலங்களை உள்ளடக்கிய இந்தப் பகுதிகள், உற்பத்தி பருவகாலத்தின் அடிப்படையில் இதர சந்தைகளுக்கும் தங்கள் விளைப் பொருளை அனுப்புகின்றன. அதிகபட்ச சாகுபடி டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நடைபெறும். தக்காளியைப் பொறுத்தவரை ஜூலை- ஆகஸ்ட் மற்றும் அக்டோபர்-நவம்பர் ஆகிய காலகட்டங்களில் பொதுவாக குறைந்த உற்பத்தியே காணப்படுகிறது. பருவமழை காலம் என்பதால் ஜூலை மாதத்தில் விநியோகம் சம்பந்தமான சவால்களும், அதனால் விலை உயர்வும் ஏற்படுகிறது. வரும் நாட்களில் நாசிக், அவுரங்காபாத், மத்திய பிரதேசத்தில் இருந்து கூடுதல் தக்காளிகள் அனுப்பப்படவிருப்பதால் கூடிய விரைவில் தக்காளி விலை குறையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications