சோனியா குடும்பத்துக்கான கருப்பு பூனை படை பாதுகாப்பு வாபஸாகிறது
டெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் குடும்பத்துக்கான கருப்பு பூனை படை எனும் சிறப்பு பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற உள்ளதாக கூறப்படுகிறது.
சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு கருப்பு பூனை படை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது இதனை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சோனியா காந்தி குடும்பத்தினருக்கு நேரடியாக எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை என உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து இம்முடிவை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு இனி இசட் பிளஸ் எனப்படும் சி.ஆர்.பி.எப். கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் பிரதமர் ஒருவருக்கு மட்டுமே கருப்பு பூனை படை எனப்படும் சிறப்பு பாதுகாப்பு அமலில் இருக்கும் என்கின்றன மத்திய அரசு வட்டாரங்கள்.
அண்மையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கான சிறப்பு பாதுகாப்பும் குறைக்கப்பட்டு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications