டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுவை, வாசனை இழந்தோரையும் கொரோனா பரிசோதனை வரம்புக்குள் கொண்டு வரும் மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: திடீர் சுவை, வாசனை இழப்போரையும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு பரசீலிக்கிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் கொரோனா வைரஸ் பரிசோதனை யார் யாருக்கெல்லாம் செய்யலாம் என்பது குறித்து திருத்தப்பட்ட வழிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மே மாதம் வெளியிட்டது.

Centre wants to do corona test for those who lost smell and taste

அதில் ஐசிஎம்ஆர் கூறுகையில், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஊருக்கும் திரும்பி வந்தவர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 7 நாட்களுக்குள் பரிசோதனை செய்ய வேண்டும்.

காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

கட்டுப்பாட்டு மண்டலங்களில் பணியாற்றும் களப்பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

அறிகுறிகள் இல்லாமல் நேரடி மற்றும் உறுதி செய்யப்பட்டவர்களின் உயர் ஆபத்து தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிக்க வேண்டும். இவர்கள் தொடர்பில் வந்த 5 முதல் 10 நாட்களில் பரிசோதிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டுகள், கட்டுப்பாட்டு மண்டலங்களில் காய்ச்சல் அறிகுறி உடையவர்கள், கடுமையான சுவாச தொற்று நோயாளிகள், அறிகுறி உடைய சுகாதார ஊழியர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

சத்தமின்றி சாதனை: 7 நாட்களில் கொரோனாவை விரட்டும் சித்த மருத்துவம்! உலகிற்கு வழிகாட்டும் தமிழகம் சத்தமின்றி சாதனை: 7 நாட்களில் கொரோனாவை விரட்டும் சித்த மருத்துவம்! உலகிற்கு வழிகாட்டும் தமிழகம்

இந்த நிலையில் கடந்த 7-ஆம் தேதி கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு பணிக்குழு கூட்டம் நடந்தது. அப்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகிற பலரும், திடீரென தாங்கள் சுவையையும் வாசனையையும் இழந்ததாக குறிப்பிட்டது பற்றி விவாதிக்கப்பட்டது.

இந்த அறிகுறி உடையவர்களையும் கொரோனா வைரஸ பரிசோதனைக்குள்படுத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனாலும் இதில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. எனினும் இது பரிசீலனையில் உள்ளது.

English summary
Centre is in consideration to check for coronavirus those who lost smell and taste.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X