"மொத்தம் 3 வழி.." பாஜகவில் ஐக்கியமாகும் சம்பாய் சோரன்? கடைசி நேரத்தில் போட்ட அந்த ஒரு ட்விட்டர் பதிவு
டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளும் கட்சியாக உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவரும் அம்மாநில அமைச்சருமான சம்பாய் சோரன் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே அவர் தனது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகுவதை உறுதி செய்யும் வகையில் அவர் தனது ட்விட்டரில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அடுத்த கட்டமாக அவர் பாஜகவில் இணைவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் அபாயமும் இப்போது ஏற்பட்டு இருக்கிறது. அங்கு முன்னாள் அமைச்சரும் மூத்த ஜேஎம்எம் கட்சித் தலைவருமான சம்பாய் சோரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.

சம்பாய் சோரன்: அங்கு ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். தான் முதல்வராகத் தேர்வானது முதல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவே தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாக குறிப்பிட்ட அவர், தன்னை சொந்த கட்சியினரே அவமானப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போது தனக்கு 3 ஆப்ஷன்கள் மட்டுமே இருப்பதாகவும் ட்வீட் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் வெளியிட்ட நீண்ட போஸ்ட்டில், "சில முன்னோடி இல்லாத நிகழ்வுகளால் கடந்த ஜனவரி 31ம் தேதி ஜார்கண்டின் 12வது முதலமைச்சராக இந்தியக் கூட்டணி என்னைத் தேர்ந்தெடுத்தது. நான் பதவியேற்ற முதல் நாள் முதல் கடைசி நாள் (ஜூலை 3) வரை எனது கடமைகளை அர்ப்பணிப்புடனும் செய்தேன்.
மக்கள் நலன்: இந்த காலகட்டத்தில், நாங்கள் மக்கள் நலனுக்காகப் பல முடிவுகளை எடுத்தோம்.. எப்போதும் போல மக்கள் என்னை எளிதாக அணுகும்படி இருந்தேன். முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும், அவர்களின் நலனையும் மனதில் வைத்தே நாங்கள் முடிவுகளை எடுத்தோம்" என்று பதிவிட்டுள்ளார்.
பின்னணி: நில மோசடி வழக்கில் அமலாக்க துறை கைது செய்யப்படுவதற்கு முன்பு ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சம்பாய் சோரன் முதல்வராகப் பதவியேற்ற நிலையில், சுமார் 5 மாதங்கள் அவர் முதல்வராக இருந்தார். கடந்த ஜூன் 28ம் தேதி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய நிலையில், அவர் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். இதற்காகச் சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது.
இது தொடர்பாக அவர் பேசுகையில், "அப்போது திடீரென அடுத்த இரண்டு நாட்களுக்கு அனைத்து நிகழ்வுகளும் ஜேஎம்எம் தலைமையால் ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறினார்கள்.. அதில் ஒன்று அரசுத் திட்டம். மற்றொன்று ஆசிரியர்களுக்கு நியமனக் கடிதங்களை விநியோகிப்பது. இது குறித்து நான் கேட்ட போது சட்டமன்றக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள். இதனால் அந்த கூட்டம் வரை முதல்வராக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள முடியாது என்றார்கள்.
அவமானப்படுத்தினார்கள்: ஒரு மாநில முதல்வரின் நிகழ்ச்சிகள் இன்னொருவரால் ரத்து செய்யப்படுவதை விட ஜனநாயகத்தில் அவமானகரமானது வேறு எதுவும் இருக்க முடியுமா? அதையும் தாண்டி மக்கள் நலத்திட்டத்தில் காலையில் கலந்து கொள்கிறேன். மாலை சட்டமன்றக் கட்சிக் கூட்டத்திற்கு வருகிறேன் என்றேன். ஆனால், அதற்குக் கூட திட்டவட்டமாக மறுத்துவிட்டார்கள்.
எனது 40 ஆண்டுக் கால களங்கமற்ற அரசியல் வாழ்க்கையில் முதன்முறையாக இந்தச் சம்பவத்தால் நான் உடைந்து போனேன். என்ன செய்வதென்று புரியவில்லை. இரண்டு நாட்கள், நான் அமைதியாக உட்கார்ந்து யோசித்தேன். நான் எதாவது தவறு செய்தேனா என யோசித்துப் பார்த்தேன். எனக்கு அதிகாரப் பேராசை எனக்குக் கொஞ்சம் கூட இல்லை. அந்த சட்டசபை கூட்டத்தில் தான் என்னை ராஜினாமா செய்யச் சொன்னார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.. ஆனால் எனக்கு அதிகார பேராசை இல்லை.. எனவே நான் உடனடியாக ராஜினாமா செய்தேன்.. ஆனால் எனது சுயமரியாதை விழுந்த அடி இது.. என் இதயம் நொறுங்கிவிட்டது.
ராஜினாமா: என்ன இப்படி அவமானப்படுத்துவதை நினைத்து உடைந்து போனேன். நான் என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முயன்றேன். ஆனால் அவர்களுக்கு அதிகாரத்தில் மட்டுமே ஆர்வம் இருந்தது. என் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த இந்த கட்சியில் எனக்கு முக்கியத்துவம் இல்லை என்பதை உணர்ந்தேன். இதற்கிடையில், இதுபோன்ற பல அவமானகரமான சம்பவங்கள் நடந்தன, அதை நான் இப்போது குறிப்பிட விரும்பவில்லை. இவ்வளவு அவமதிப்பு பிறகு எனக்கு வேறு வழி இல்லை. நான் மாற்று வழியைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இன்றிலிருந்து என் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப் போகிறது. இங்கே எனக்கு மூன்று வழிகள் இருந்தன. முதலில், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது.. இரண்டாவது, சொந்தமாகத் தனிக் கட்சியைத் தொடங்குவது.. மூன்றாவது எனக்கு ஏற்ற கருத்துடையவர்களைக் கண்டறிந்து அவர்களுடன் பயணிப்பது" என்று பதிவிட்டுள்ளார்.
தனது சொந்த கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மீதே அவர் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதன் மூலம் அவர் ஜேஎம்எம் கட்சியில் இருந்து விலகுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம். அடுத்து விரைவில் அவர் பாஜகவில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம்












Click it and Unblock the Notifications