சந்திரயான் 2 வெற்றியால் நிலவை பற்றிய நமது அறிவியல் மேலும் மேம்படும்.. பிரதமர் மோடி பாராட்டு
Recommended Video
டெல்லி: உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நிலவின் தென் துருவத்தை ஆராய ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டில் புறப்பட்ட சந்திரயான் 2, வெற்றிகரமாக புவி வட்டப் பாதையில் நுழைந்தது. நீள்வட்ட சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைகோள் படிப்படியாக உயர்த்தப்பட்டு நிலவை நோக்கி பயணிக்க உள்ளது.

சந்திரயான் 2 விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ள செயல், நம் இஸ்ரோ விஞ்ஞானிகளின் வலிமையை பறைசாற்றுவதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Special moments that will be etched in the annals of our glorious history!
— Narendra Modi (@narendramodi) July 22, 2019
The launch of #Chandrayaan2 illustrates the prowess of our scientists and the determination of 130 crore Indians to scale new frontiers of science.
Every Indian is immensely proud today! pic.twitter.com/v1ETFneij0
விஞ்ஞானத்தின் புதிய எல்லைகளை அளவிட 130 கோடி இந்தியர்களின் உறுதியை விளக்குவதாக, சந்திரயான் 2 விண்கலத்தின் பயணம் அமைந்துள்ளது. ஒவ்வொரு இந்தியரும் இன்று பெருமிதம் கொண்டுள்ளனர்.
Indian at heart, Indian in spirit!
— Narendra Modi (@narendramodi) July 22, 2019
What would make every Indian overjoyed is the fact that #Chandrayaan2 is a fully indigenous mission.
It will have an Orbiter for remote sensing the Moon and also a Lander-Rover module for analysis of lunar surface.
மேலும் சந்திரயான் 2 முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பது ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்ச்சியடைய செய்யும். இது சந்திரனை ரிமோட் சென்சிங் செய்வதற்காக ஒரு ஆர்பிட்டரை தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் நிலவின் நிலப்பரப்பில் இறங்கி ஆராய்ச்சி செய்ய லேண்டர்-ரோவரையும் கொண்டுள்ளது என பிரதமர் விளக்கியுள்ளார்.
சந்திரயான் 2 மிகவும் தனித்துவமானது, ஏனெனில் இது நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய்ச்சி செய்ய உள்ளது. எந்தவொரு கடந்த கால ஆராய்ச்சிகளிலும் செய்யாத முயற்சியில், சந்திராயன் 2 ஈடுபட உள்ளது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் நிலவை பற்றிய புதிய தகவல்களை நமக்கு வழங்கும் என கூறியுள்ளார்.
இந்த பணி சந்திரனைப் பற்றிய புதிய அறிவை வழங்கும். சந்திரயான் 2 போன்ற முயற்சிகள் நமது இளைஞர்களை அறிவியல், உயர்தர ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை நோக்கி செல்ல மேலும் ஊக்குவிக்கும்.
Efforts such as #Chandrayaan2 will further encourage our bright youngsters towards science, top quality research and innovation.
— Narendra Modi (@narendramodi) July 22, 2019
Thanks to Chandrayaan, India’s Lunar Programme will get a substantial boost. Our existing knowledge of the Moon will be significantly enhanced.
சந்திரயான் 2 விண்கலத்திற்கு நன்றி என குறிப்பிட்டுள்ள பிரதமர், இத்திட்டத்தால் நிலவைப் பற்றிய நமது தற்போதைய அறிவு கணிசமாக வளரும் என கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications