100% சக்சஸ்! களமிறங்கும் இந்தியாவின் பாகுபலி! உற்று நோக்கும் உலக நாடுகள்! சந்திரயான்-3 ஏன் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இஸ்ரோ நிறுவனம் நாளைய தினம் சந்திரயான் 3 விண்கலனை அனுப்ப உள்ளது. இன்னும் சில மணி நேரம் மட்டுமே இருக்கும் நிலையில், சந்திரயான் 3 திட்டம் ஏன் சர்வதேச அளவில் முக்கியமானது என்பதைப் பார்க்கலாம்.

இஸ்ரோ நிறுவனம் நாளைய தினம் சந்திரயான் 3 விண்கலனை அனுப்பவுள்ளது. சந்திரயான் 3 ராக்கெட் கவுன்டவுன் ஆரம்பித்துள்ள நிலையில், நாளை ஜூலை 14ஆம் தேதி சரியாக மதியம் 2.35 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் பாய உள்ளது.

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் வங்காள விரிகுடா கடற்கரையில் அனைத்து பணிகளும் பக்காவாக நடந்து முடிந்து இருக்கிறது. நிலவின் மேற்பரப்பில் துல்லியமாகத் தரையிறங்க வேண்டும் என்பதே சந்திரயான் 3 திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

 Chandrayaan 3 is pairing up with ISRO Bahubali Rocket LVM 3 With that has 100% Success Rate

சந்திரயான் 3: நிலவை நோக்கிய இந்தியாவின் மூன்றாவது பயணம் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) மதியம் தொடங்கும். கடந்த நூற்றாண்டில் மிகவும் வெற்றிகரமாக இருந்த பயணம் என்றால் அது அமெரிக்காவின் ஆர்ட்டெமிஸ். இத்திட்டத்தின் மூலம் அவர்கள் பல முறை நிலவுக்குச் சென்று திரும்பியுள்ளனர். இப்போது அமெரிக்கா மீண்டும் ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் கவனம் செலுத்தும் நிலையில், இந்த சந்திரயான் 3 திட்டம் நடக்கிறது.

சந்திரயான் திட்டம் என்பது நிலவை அடைந்து ஆய்வு செய்யும் இந்தியாவின் ஒரு முயற்சியாகும். கடந்த 2008இல் இஸ்ரோ முதல்முறையாகச் சந்திரயானை அனுப்பியது. அப்போது உலக நாடுகள் இஸ்ரோவை வியந்து பார்த்தது. ஏனென்றால் அதுவரை அவ்வளவு குறைந்த செலவில் பக்காவாக நிலவில் சென்று தரையிறங்குவது போல எந்தவொரு நாடும் ராக்கெட்டை அனுப்பியதே இல்லை. அதை முறியடித்து புதிய சாதனையை இந்தியா படைத்தது.

இந்தியாவின் பாகுபலி: இப்போது அதே சந்திரயான் திட்டத்தின் 3ஆவது ராக்கெட் அனுப்பப்பட உள்ளது. 3,921 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள் சுமார் 4 லட்சம் கிமீ தொலைவுக்கு எடுத்துச் செல்லப்பட இருக்கிறது. இந்தியாவின் பாகுபலி என்று அழைக்கப்படும், லாஞ்ச் வெஹிக்கிள் மார்க் 3 (LM-3) என்ற ராக்கெட் சந்திரயானை சுமந்து செல்ல உள்ளது. இந்த ராக்கெட் மட்டும் 642 டன் எடை கொண்டதாகும். அதாவது 130 ஆசிய யானைகளின் மொத்த எடைக்குச் சமமாகும். அதேபோல இதன் உயரம் 43.5 மீட்டராகும்.

இதுவரை 100% சக்சஸ் ரேட்டை கொண்ட இந்த ராக்கெட்டின் 6ஆவது பயணம் இதுவாகும். இந்தப் பணமும் வெற்றிகரமாகவே இருக்கும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். இந்த சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்திற்கு அருகே தரையிறங்க உள்ளது. சந்திரயான் 3 மட்டும் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கினால், இந்த சாதனையைப் புரியும் 4ஆவது நாடாக இந்தியா இருக்கும். இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளின் ராக்கெட் மட்டுமே நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது.

மிக பெரிய எஸ்யூவி கார் அளவிலான செயற்கைக்கோளில் தான் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இருக்கிறது. அந்த இரண்டையும் திட்டமிட்ட இடத்திற்கு எடுத்துச் செல்ல இதில் propulsion சிஸ்டம் இருக்கிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திரனில் தரையிறங்குவதற்கான ஆரம்ப முயற்சி எடுக்கப்படும். நிலவின் தன்மை, மண், அங்கே ஏற்படும் நிலநடுக்கம் குறித்த ஆய்வுகளைச் சந்திரயான் 3இன் மூலம் செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

ஏன் முக்கியம்: சந்திரயான் 1 திட்டத்தில் தான் நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பது உறுதி கண்டுபிடிக்கப்பட்டது. இது நிலவு குறித்த பார்வையையே மாற்றியது. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா மீண்டும் நிலவு குறித்த ஆய்வுகளை மீண்டும் இதுவே காரணமாக இருந்தது. இந்தச் சூழலில் இஸ்ரோ சந்திரயான் 3 திட்டத்தை அனுப்பும் நிலையில், இதில் என்ன கண்டுபிடிப்புகள் இருக்கும் என்பதை நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+