ஏய் விடாத! வந்தே பாரத் ரயில் ஊழியர்கள் இடையே சண்டை.. பதறிய பயணிகள்! பரவும் வீடியோ
டெல்லி: வந்தே பாரத் ரயில் ஊழியர்கள், டெல்லி ரயில் நிலையத்தில் மாறி மாறி தாக்கி கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. பரபரப்பாக காட்சியளிக்கும் ரயில் நிலையத்தில் பயணிகள் கண்முன்னே நடந்த இந்த சம்பவம் பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி பலரும் அதிர்ச்சி தெரிவித்த நிலையில், ரயில்வே உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிசாமுத்தீன் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் ஊழியர்கள் சண்டையிட்டுக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வந்தே பாரத் ரயிலின் ஊழியர்களே ஒருவருக்கொருவர் ரயில் நிலையத்தில் மாறி மாறி அடித்துக்கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

பதறி ஓடிய பயணிகள்
டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிசாமுத்தீன் ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 30 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், ரயில்வே ஊழியர்கள் சிலர் கைக்கலப்பில் ஈடுபடுகின்றனர். ஒரு கட்டத்தில் மோதல் முற்றி பெல்டால் அடித்துகொள்கின்றனர். கையில் கிடைத்த குச்சிகள், டஸ்ட்பின்கள் என அனைத்தையும் பயன்படுத்தி பயங்கரமாக அடித்துக்கொண்ட காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.
ரயில் ஊழியர்கள் இப்படி அடித்துக்கொண்டதை பார்த்த பயணிகள் சிலர் அச்சத்துடன் அங்கிருந்து நகரும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. டெல்லி ரயில் நிலையத்தை பதற வைத்த இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:- வந்தே பாரத் ரயிலில் பேண்ட்ரி உதவியாளர்கள் இடையே ரயிலுக்குள் வாட்டர் பாக்ஸ் வைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
IRCTC staffers serving onboard Vande Bharat settle an altercation with dustbin, belt and punches at Nizamuddin station in Delhi. pic.twitter.com/tldenRsRMz
— Piyush Rai (@Benarasiyaa) October 17, 2025
4 பிரிவுகளில் வழக்கு
இரு தரப்பினரும் வாக்கு வாதம் செய்த நிலையில், மோதல் முற்றி கைக்கலப்பாக மாறியுள்ளது. ரயில் நிலையத்தின் 7-வது பிளாட்பார்மில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது" என்றனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
ரயில்வே போலீசார், மோதலில் ஈடுபட்டதாக 4 பேரை கைது செய்துள்ளனர். ரயில்வே பாதுகாப்பு சட்டம் ( FIR (No. 74/25, U/s 194(2) BNS, dated 17/10/25) கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்(ஐஆர்சிடிசி) உடனடியாக இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளது.
நெட்டிசன்கள் கருத்து
ஐஆர்சிடிசி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த விவகாரத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக பார்க்கிறோம். நான்கு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சேவை வழங்கும் நிறுவனத்தின் 4 ஊழியர்கள் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த நான்கு ஊழியர்களின் ஐடி கார்டுகளும் முடக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு சேவை வழங்கும் ஒப்பந்தராரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது. ரயில் நிலையத்தில் ரயிலின் பேண்ட்ரி ஊழியர்கள் அடித்துக்கொண்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், பயணிகளை அச்சுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
ஏற்றுக்கொள்ள முடியாது
பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு பயணிகளும் ரயில் நிலையத்தில் பொறுப்பற்ற முறையில் ரயில் சார்ந்த ஊழியர்களே இப்படி நடந்து கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பதிவிட்டுள்ளனர். அதேபோல, மற்றொரு நெட்டிசன் கூறுகையில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் ஒப்பந்ததாரரின் லைசன்ஸை உடனே ரத்து செய்ய வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications