பெங்களூர் - சென்னை விரைவு சாலை பணி எப்போது முடியும்? லோக் சபாவில் கட்கரி தந்த சூப்பர் அப்டேட்
பெங்களூர் - சென்னை விரைவுச்சாலை பணி வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என லோக்சபாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசினார்.
டெல்லி: திட்டங்களை செயல்படுத்தவும் முடிக்கவும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பும் மத்திய அரசுக்கு தேவைப்படுகிறது என்று மக்களவையில் திமுக எம்.பி தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்தார். அப்போது பெங்களூர் -சென்னை விரைவுச்சாலை பணி எப்போது முடியும் என்றும் அவர் கூறினார்.
எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் அதன் சாலை கட்டமைமைப்பு இன்றியமையாததாக உள்ளது. தொழில்துறை வளர்ச்சிக்கும் நல்ல சாலை கட்டமைப்புகள் அவசியமானது.
அப்போதுதான் சரக்குகளும் கூட ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும். தொழில் வளர்ச்சி மேம்படும் போது வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

சென்னை - பெங்களூர் சாலை
இதனால், நாட்டின் பொருளாதாரமும் உயரும். எனவே நாடு முழுவதும் சாலை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை - பெங்களூர், பெங்களூர் - மைசூர் எனப் பல நெடுஞ்சாலை பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது.

சாலையை விரிவு படுத்தும் பணி
குறிப்பாக நாட்டின் முக்கிய சாலைகளில் ஒன்றாக சென்னை - பெங்களூர் இடையேயான வழித்தடம் உள்ளது. 285.3 கி.மீ. தூரத்துக்கான விரைவுச் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலை வழியாக சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல தற்போது சுமார் 5 முதல் 7 மணி நேரம் வரை ஆகிறது. பயண நேரத்தை குறைக்கும் விதமாகவும் பாதுகாப்பான பயணமாக மாற்றும் நோக்கத்திலும் சாலையை விரிவு படுத்தும் பணிகளை இந்திய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு உள்ளது.

டிசம்பர் மாத இறுதிக்குள்
ரூ.17 ஆயிரம் கோடி செலவில் அமையும் இந்த விரைவுச் சாலை திட்டம் வரும் மார்ச் 2024க்குள் தயாராகிவிடும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தற்போது இந்த சாலை பணிகள் முடிவடையும் காலம் மேலும் தாமதம் ஆகும் என்று தெரியவந்துள்ளது. மக்களவையில் இன்று பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த விரைவுச்சாலை பணிகள் முடிவுக்கு வரும் என்றார்.

நிதின் கட்காரி பதில்
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது நெடுஞ்சாலைகளில் ஆப்டிகல் பைபர் உள்கட்டமைப்பு பணிகள் அமைக்கும் பணி தொடர்பாக தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- திட்டங்களை செயல்படுத்தவும் முடிக்கவும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பும் மத்திய அரசுக்கு தேவைப்படுகிறது. பெங்களூர் விரைவுச்சாலை பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சுற்றுச்சூழல் அனுமதி
தமிழ்நாட்டை பொறுத்தவரை நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி போன்றவை கிடைப்பது சிக்கலான பணியாக உள்ளது. பிறகு எப்படி ஒப்பந்ததாரர்கள் வேலையை முடிப்பார்கள். சென்னை - பெங்களூர் விரைவுச்சாலை பணிகள் இந்த ஆண்டு இறுதி அதாவது டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். சென்னை - பெங்களூர்விற்கு இரண்டு மணி நேரத்தில் செல்ல முடியும். பெங்களூர் டூ மைசூரு இடையேயான பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டது. பெங்களூர்வில் இருந்து மைசூருவிற்கு ஒரு மணி நேரத்தில் செல்ல முடியும்" என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications