சென்னை உட்பட 130 சிவப்பு மண்டலங்கள்.. மே 3-க்கு பிறகும் நீடிக்கும் மத்திய அரசின் கட்டுப்பாடுகள்
டெல்லி :மத்தி அரசு கொரோனா பரவல் குறித்த ஹாட்ஸ்பாட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதில் சிவப்பு மண்டல லிஸ்டில் உள்ள சென்னை உள்பட 130 மாவட்டங்கள் உள்ளதால், இந்த மாவட்டங்கள் மே 3ம் தேதிக்கு பிறகும் முடங்கும் நிலை உள்ளது.
Recommended Video
மத்திய சுகாதார அமைச்சகம் இந்தியா முழுவதும் 733 மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாக பிரித்துள்ளது.
இதில் இந்தியாவில் அனைத்து பெருநகர நகரங்களிலும் (டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் அகமதாபாத்) மே 3ம் தேதி லாக்டவுன் முடிவடைந்த பின்னரும் 'எந்த நடவடிக்கையும் இல்லாத' மண்டலங்களின் லிஸ்டில் மத்திய அரசு வைத்துள்ளது.

ஆரஞ்சுகள் மண்டலங்கள்
மத்திய அரசு வெளியிட்டுள்ள லிஸ்டில் நாடு முழுவதும் 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக உள்ளன. இங்கெல்லாம் மே 3ம் தேதிக்கு பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். அதேநேரம் ஆரஞ்சு மண்டலங்கள் லிஸ்டில் 284 மாவட்டங்கள் உள்ளன. இங்கு ஓரளவு கட்டுப்பாடும் தளர்வும் இருக்கும். பச்சை மண்டலத்தில் 319 மாவட்டங்கள் உள்ளன. இங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

சிவப்பு லிஸ்டில்
மத்திய அரசு வெளியிட்டுள்ள லிஸ்டில் நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் அதிகப்படியாக சிவப்பு மண்டலங்கள் உள்ளது. முறையே உத்தரப்பிரதேசத்தில் 19, மகாராஷ்டிராவில் 14 மாவட்டங்களும் உள்ளது. தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாகவம், டெல்லியின் 11 மாவட்டங்கள்(அனைத்தும்) சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளை 'எந்த நடவடிக்கையும் இல்லாத' மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது எந்த செயல்பாடுகளுக்கும் அனுமதி இருக்காது என்று தெரிகிறது. 130 சிவப்பு மண்டல மாவட்டங்களும் முடக்கப்படும் என்று தெரிகிறது.

மகாராஷ்டிரா
மும்பையின் புறநகர் பகுதிகள் மற்றும் தானே, பால்கர் ஆகியவை சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.. இந்த பிரிவில் மகாராஷ்டிராவின் பிற மாவட்டங்களான புனே, நாசிக், நாக்பூர், சோலாப்பூர், யவத்மால், அவுரங்காபாத், சதாரா, துலே, அகோலா, ஜல்கான் மற்றும் ராய்காட் ஆகியவையும் உள்ளன.

உபி மாநில பகுதிகள்
உத்தரபிரதேசத்தில், டெல்லியின் என்.சி.ஆர் பிராந்தியமான கௌதம புத்த நகர் சிவப்பு மண்டலமாகவும், காஜியாபாத் ஆரஞ்சு வகையிலும் குறிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச தலைநகரான லக்னோ, ஆக்ரா, சஹரன்பூர், கான்பூர் நகர், மொராதாபாத், ஃபெரோசாபாத், புலந்த்ஷாஹர், மீரட், ரேபரேலி, வாரணாசி, பிஜ்னோர், அம்ரோஹா, சாண்ட் கபீர் நகர், அலிகார், முசாபர்நகர், ராம்பூர், மதுரா ஆகியவையும் ஆரஞ்சு மண்டலமாக வருகிறது. இதேபோல் டெல்லியின் மற்ற என்.சி.ஆர், பகுதியான குர்கான் - இது ஹரியானாவின் கீழ் வருகிறது. இதுவும் ஆரஞ்சு மண்டலத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications