நாடாளுமன்றத்தில் தமிழ்.. பாரதியார் பாடலால் நிர்மலா சீதாராமனை வாழ்த்திய ப.சிதம்பரம்!
டெல்லி: ராஜ்யசபாவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பாரதியார் பாடல் மூலம் வாழ்த்தினார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
லோக்சபா தேர்தலில் தமிழ் இலக்கியவாதிகளான கவிஞர் கனிமொழி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி, ரவிக்குமார், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் வெற்றி பெற்று எம்.பிக்களாகி உள்ளனர். லோக்சபாவில் தமிழக எம்.பிக்கள் அனைவரும் தமிழில் பதவி ஏற்றனர்.

இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து 'ஜெய் ஶ்ரீராம்' என முழங்கியது. அதற்கு பதிலடியாக வெல்க திராவிடம் உள்ளிட்ட முழக்கங்களை தமிழக எம்பிக்கள் முன்வைத்தனர்.
சில நாட்களுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பிசிராந்தையார் பாண்டிய மன்னன் அறிவுடைநம்பிக்கு அறிவுரை கூறும் யானை புக்க புலம் போல புறநானூற்றுப் பாடலை மேற்கோள்காட்டி பேசினார்.
இதற்கு பதிலடியாக இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்ற திருக்குறளை திமுகவின் ஆ. ராசா சுட்டிக்காட்டி பேசினார். இன்று ராஜ்யசபாவில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது பாரதியாரின் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்; பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்ற வரிகளை சுட்டிக்காட்டினார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications