உங்களுக்கு எவ்வளவு தைரியம்.. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் வாங்கி கட்டிய வழக்கறிஞர்.. என்னாச்சு
டெல்லி: நீதிமன்றத்தில் பிறப்பித்த உத்தரவை பதிவாளரிடம் சரிபார்த்துக்கொண்டதாக கூறிய வழக்கறிஞரை கடுமையாக கடிந்து கொண்ட தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், இன்னும் கொஞ்ச காலம் இருந்தாலும் நான் தான் இப்போது வரை இந்த நீதிமன்றத்திற்கு பொறுப்பு எனக் கூறினார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் மிகவும் கண்டிப்புடன் இருப்பவர். வழக்கறிஞர்கள் யாரேனும், நீதிமன்றத்தின் மாண்பை பின்பற்றாமல் நடந்து கொண்டால், உடனடியாக கடிந்து கொள்வார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, வழக்கு ஒன்றில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், யா யா என சொன்னதால் கோபம் அடைந்த டிஒய் சந்திரசூட், இது என்ன காபி கடையா? யெஸ் என்ற வார்த்தையை பயன்படுத்துங்கள்.. யாயா என்ற வார்த்தை எனக்கு பிடிக்காத ஒன்று என சாடியிருந்தார்.

இந்த நிலையில் தான், இன்றும் உச்ச நீதிமன்றதில் வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் ஒருவரை கடுமையாக கடிந்து கொண்டார். இது குறித்த விவரம் வருமாறு:- உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் அமர்வில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் விவரங்களை பதிவாளரிடம் சரிபார்த்துக்கொண்டேன் எனக் கூறினார்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி, "உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் நான் நீதிமன்றத்தில் பிறபித்த உத்தரவை பதிவாளரிடம் சரிபார்த்து இருப்பீர்கள்.. நாளைக்கு, நீங்கள் எனது வீட்டிற்கு வந்து எனது தனிப்பட்ட செயலாளரிடம் நான் என்ன செய்கிறேன் என்று கேட்பீர்களா? எனக் காட்டமாக கேட்டார். மேலும், இன்னும் கொஞ்ச காலமே இருந்தாலும் நான் தான் இப்பவும் இன்சார்ஜ்... இது போல வேடிக்கையான டிரிக்ஸ்களை இனியும் முயற்சிக்காதீர்கள். இந்த நீதிமன்றத்தில் எனது கடைசி நாட்கள் சென்று கொண்டிருக்கின்றன" என்றார்.
நடுவர் மன்றம் தொடர்பான வழக்கு ஒன்றின் போது வழக்கறிஞரை தலைமை நீதிபதி இவ்வாறு கடிந்து கொண்டார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் டி ஒய் சந்திரசூட், வரும் நவம்பர் 10 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். நீதிபதி சந்திரசூட் ஓய்வுக்கு பிறகு சஞ்சீவ் கண்ணா தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டி ஒய் சந்திரசூட் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தனது 2 ஆண்டு கால பதவிக்காலத்தில் நீதிமன்றத்தின் கண்ணியத்தை உறுதி செய்வதில் தலைமை நீதிபதி அதிக கவனம் செலுத்தியுள்ளார். நீதிமன்ற விதிகளை பின்பற்றாத வழக்கறிஞர்களை உடனடியாக எச்சரிப்பதும், அறிவுரையும் பலமுறை தலைமை நீதிபதி கூறியுள்ளார். முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில், வழக்கறிஞர் ஒருவரை கடுமையாக கடிந்து கொண்டார்.
இது ஒன்றும் பொது விவாதம் நடத்தும் இடம் இல்லை. நீதிமன்ற அறையில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஏதாவது கோரிக்கை என்றால் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். தலைமை நீதிபதியாக எனது முடிவை கேட்டு இருக்க வேண்டும். மனுதாக்கல் செய்யவேண்டும் என்றால் மெயிலில் தாக்கல் செய்யுங்கள்.. இதுதான் நீதிமன்றத்தின்விதி" என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications