தலைமையேற்ற முதல்வர் ஸ்டாலின்.. துவங்கியது சமூக நீதிக்கான இந்திய கூட்டமைப்பின் முதல் மாநாடு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று டெல்லியில் துவங்கியது. காணொளி வாயிலாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையேற்று மாநாட்டை துவங்கி வைத்தார்.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் மட்டுமே இருக்கும் நிலையில், பாஜக இந்த தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த முறையும் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடிதான் போட்டியிட இருக்கிறார். எனவே இம்முறை வெற்றி பெற்றால் முன்னாள் பிரதமர் நேருவுக்கு அடுத்து தொடர்ந்து 3 முறை பிரதமராக பதவி வகித்த தலைவர் என்கிற பெருமையை நரேந்திர மோடி பெறுவார். ஆனால் கள யதார்த்தம் இந்த வெற்றிக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள தொடங்கியுள்ளன. மட்டுமல்லாது, மாநில கட்சிகளின் பலம் முன்பை விட தற்போது அதிகரித்திருக்கிறது. இந்த சூழலின் பின்னணியில்தான் சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று டெல்லியில் துவங்கியது. இந்த மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். சென்னையிலிருந்து காணொலி வாயிலாக அவர் சிறப்புரையாற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

அண்ணா

அண்ணா

இன்று மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் என 24 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். சமூக நீதிக்கான போராட்டத்தையும், சமூக நீதி இயக்கத்துக்கான தேசியக் கூட்டுத் திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. சமூக நீதியை நிலைநாட்ட வலிமையான அரசியல் இயக்கம் அவசியம் என்பதை உணர்ந்த அண்ணா 1949-ல் திமுக-வைத் தொடங்கினார். அப்போதிலிருந்து 74 ஆண்டுகளுக்கும் மேலாக, சமூக நீதி, திராவிட இனம், மொழி, கலை, பண்பாடு, நாகரிகத்தின் பெருமைகள், பாரம்பரியத்தைப் பாதுகாத்து வருகிறது திமுக. அண்ணாவைத் தொடர்ந்து, கருணாநிதியும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கவும், விளிம்புநிலை மக்களும் சமூக,பொருளாதார ரீதியாக மேம்பாடு அடையவும் பல திட்டங்களை செயல்படுத்தினார்.

வளர்ச்சி

வளர்ச்சி

அவரது வழியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து துறைகளின் வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களின் மேம்பாடு, அனைத்து சமூகமும் உயர்வு என்ற நோக்குடன் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். தமிழகத்தில் சமூகநீதி முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அரசால் சமூகநீதிக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவி, பதவி உயர்வு, நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி முறையாகவும், முழுமையாகவும் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணித்து வருவதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக

திமுக

மேலும் சமூகம், அரசியல், பொருளாதாரம், மக்கள் மேம்பாடு, அனைத்திலும் நவீனமயம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியை தமிழக அரசு நடத்தி வரும் நிலையில், இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சமூக நீதிக்கான அகில இந்தியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அமைப்பாளரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான வி.ஈஸ்வரய்யா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான பி.வில்சன் முதன்மை உரையாற்றினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தலைமை உரையாற்றினார்.

 பங்கேற்பாளர்கள்

பங்கேற்பாளர்கள்

சிறப்பு விருந்தினர்களாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தர பிரதேச மாநில எதிர்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஃபரூக்அப்துல்லா, அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரைன், தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் மகாராஷ்டிரா துணை முதல்வருமான சஜன் சந்திரகாந்த் புஜ்பால் உள்பட பல கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

 கூட்டணி் கட்சிகள்

கூட்டணி் கட்சிகள்

மேலும், இந்த மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி., மனிதநேய மக்கள்கட்சித் தலைவர் எம்.எச். ஜவஹிருல்லா எம்எல்ஏ, கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏ, தவாக தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

 பத்திரிகையாளர்கள்

பத்திரிகையாளர்கள்

பத்திரிகையாளர்கள் மூத்த பத்திரிகையாளர் திலிப் மண்டல், பிஏஎம்சிஇஎஃப் தேசிய தலைவர் வாமன் மேஷ்ராம், பிஏஜிஏஏஎம் தேசிய அழைப்பாளர் பி.என்.வாங், இந்திய மக்கள் கட்சியின் முன்னாள் தலைவர் பி.டி.போர்கார், சம்விதான் பச்சாவோ சங்கர்ஷ் சமிதி அழைப்பாளர் அனில் ஜெயிந்த், டெல்லி பல்கலை.பேராசிரியர்கள் லஷ்மன் யாதவ், சுராஜ் மண்டல், ரத்தன் லால், மத்திய பிரதேச பிச்சுடா வர்க் சம்யுக்த் சங்கர்ஷ் மோர்ச்சா முதன்மை ஒருங்கிணைப்பாளர் பகதூர் சிங்லோடி ஆகியோர் அறிமுக உரையாற்றுகின்றனர். சமாஜிக் சேட்னா அறக்கட்டளை நிறுவனரும், அலாகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான வீரேந்திர சிங் யாதவ் நன்றி கூற உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+