வேலையை காட்டிய சீனா.. வேட்டைக்கு சென்ற சிறுவனை கடத்தி.. அருணாசல பிரதேசத்தில் திடீர் பரபரப்பு
டெல்லி: அருணாசல பிரதேசத்தில் வேட்டைக்கு சென்ற 17 வயது சிறுவனை சீன ராணுவம் கடத்தி சென்றுள்ளது.. அந்த சிறுவன் என்ன ஆனான் என்று தெரியவில்லை.. இதையடுத்து சிறுவனை மீட்க நடவடிக்கை வேண்டும் என்று மத்திய அரசின் உதவியை நாடியுள்ளார், சம்பந்தப்பட்ட தொகுதியின் எம்.பி..!
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை தகராறு தொடர்ந்து நீடித்து வருகிறது.. இதற்காக எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும்கூட முடிவு எதுவும் இன்னமும் எட்டப்படவில்லை..
குறிப்பாக, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு, இந்த பேச்சுவார்த்தைகள் பலவாறாக அதிகரிக்கப்பட்டும் பலனில்லை.. எனவே, 2 நாடுகளுமே தங்கள் வீரர்களை போட்டி போட்டுக் கொண்டு எல்லையில் குவித்து வருகின்றன.
உத்தர பிரதேச தேர்தல்: மாயாவதி போட்டியிடாத தேர்தல் களத்தில் பகுஜன் சமாஜ் கட்சி - என்ன பின்னணி?

ஒப்புதல்
அருணாச்சல பிரதேசத்திலும் இரு தரப்புக்கும் இடையே அமைதியற்ற சூழல் உருவாகியுள்ளது... இதனிடையே, சீனாவின் எல்லைகள் மீட்பு மற்றும் விரிவாக்க சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, ஜனவரி முதல் தேதியிலிருந்தே எல்லை பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வருகிறது.. அவர்களின் அந்த சட்டத்தின்படி, அருணாசல பிரதேசமும் அடங்கி உள்ளது.. எனவே, அருணாசலபிரதேசத்தின் எல்லையோர கிராமங்களை கட்டவும் சீனா திட்டமிட்டு வருகிறது.

சர்ச்சை
நாளுக்கு நாள் அருணாசல பிரதேசத்தை, சீனா மெல்ல மெல்ல கைப்பற்றி சொந்தம் கொண்டாடி வருகிறது... அதன்படி, கடந்த மாதங்களில், அருணாச்சல பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் சீனா புதிய கிராமம் ஒன்றை அதாவது 100 குடும்பங்கள் வாழக் கூடிய வகையில் ஒரு கிராமத்தை அங்கு ஏற்படுத்தியதாக சொல்லப்பட்டது.. பிறகு, அம்மாநிலத்தில் உள்ள மேலும் 15 இடங்களுக்கு சீன பெயர்களை அந்த நாடு அதிகாரபூர்வமாக வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது.

சீன எழுத்துக்கள்
அருணாசல பிரதேசத்துக்கு உட்பட்ட 8 குடியிருப்பு பகுதிகள், 4 மலைகள், 2 ஆறுகள், ஒரு மலைப்பாதை போன்றவற்றுக்கு சீன, திபெத், ரோமன் எழுத்துகளில் பெயர் சூட்டப்பட்டது.. சீனாவின் இந்த நடவடிக்கைக்குதான் இந்தியா ஆட்சேபம் தெரிவித்து, தக்க பதிலடியும் தந்தது.. மேலும், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பெயர்களை ஒதுக்குவது இந்த உண்மையை மாற்றாது என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக கூறியிருந்தது.

வேட்டைக்கு சென்ற 2 பேர்
இந்நிலையில், இன்னொரு பகீரை கிளப்பி விட்டுள்ளது சீனா.. அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜிடோ என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் மிரம் தரோன் மற்றும் ஜானி யாயிங்.. இதில் ஜானிக்கு 27 வயதாகிறது.. மிரம் தரோனுக்கு 17 வயதாகிறது.. இவர்கள் இருவரும் பக்கத்திலுள்ள துதிங் பகுதிக்கு வேட்டையாட சென்றிருக்கிறார்கள்.. இது சீன எல்லை பகுதியை ஒட்டியுள்ள இடம் என்கிறார்கள்.. இந்த இடத்தில் வேட்டைக்கு வந்த 2 பேரையுமே சீன ராணுவம் சிறைப்பிடித்து விட்டது.. ஆனால் ஜானி யாயிங் அங்கிருந்து எப்படியோ தப்பி ஓடிவந்துவிட்டார்..

என்ன கதி?
ஆனால் சிறுவன் மிரம் தரோன் மட்டும் வீடு திரும்பவில்லை. அவனை சீன ராணுவம் கடத்தி சென்றதாக தெரிகிறது. இது அந்த பகுதியில் பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.. சீன ராணுவத்திடம் இருந்து சிறுவன் மிரம் தரோனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தொகுதியின் எம்பி தபிர் காவோ, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்... இதுதொடர்பாக உள்துறை இணை அமைச்சர் நிஷித் பிரமாணிக்கிடம் எடுத்துரைத்திருப்பதாகவும் அவரும் பதிலளித்துள்ளார்.. அந்த சிறுவன் என்ன ஆனான் என்று தெரியவில்லை. இதனால் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.