சீன எல்லையில் மாஸ் திட்டம்.. பாங்காங் ஏரிக்கு அதிவேக இடைமறிப்பு படகுகள் அனுப்பும் இந்தியா
டெல்லி: மே மாத தொடக்கத்தில் இருந்து இந்திய மற்றும் சீன வீரர்கள் கடுமையான மோதலின் காரணமாக கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் திசோ ஏரி பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் அந்த பகுதிக்கு ஆயுதங்களுடன் ஒரு டஜன் புதிய அதிவேக இடைமறிப்பு படகுகளை அனுப்ப பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது
Recommended Video
கிழக்கு லடாக்கில் 13,900 அடி உயரத்தில் பாங்காங் திசோ ஏரி அமைந்துள்ளது. இங்கு ஏரியில் ரோந்து செல்வதற்கு இந்திய ராணுவத்திடம் 17 கியூஆர்டி (விரைவு-எதிர்வினை குழு) படகுகள் உள்ளன.
ஆனால் தற்போது உள்ள சூழலில் அதைவிட சக்தி வாய்ந்த ரோந்து படகுகள் தேவைப்படுகிறது. ஏனெனில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம், 928 பி ரோந்து படகுகளை ரோந்துக்காக பயன்படுத்தி வருகிறது.

மிகவும் சவாலானது
இந்நிலையில் சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆயுதங்களுடன் அதிவேக இடைமறிப்பு படகுகளை அனுப்பும் திட்டத்தை இந்தியா இறுதி வருகிறது. ஆனால் உண்மையில் இதை பாங்கோங் திசோ ஏரிக்கு கொண்டு செல்வது மிகப்பெரிய சவாலானது என்று ராணுவத்தினர் கூறுகிறார்கள். ஏனெனில் ஏனென்றால் புதிய படகுகள் அல்லது வேகமான இடைமறிப்பு படகுகளை அதிக உயரத்திற்கு கொண்டு செல்வது மிகவும் கடினமாக இருக்கும். சி -17 குளோப்மாஸ்டர் -3 விமானம் மூலம் படகுகளை கொண்டு செல்ல வேண்டும், பின்னர் அங்கிருந்து ஏரியை அடைய முன்னேறலாம். இது நேரம் எடுக்கும் என்று ராணுவத்தினர் கூறினர்.

134 கி.மீ நீளமுள்ளது
134 கி.மீ நீளமுள்ள பாங்காங் ஏரி, மூன்றில் இரண்டு பங்கு திபெத்திலிருந்து இந்தியா வரை விரிவடைவதால் சீனாவால் கட்டுப்படுத்தப்படுகிறது, இது பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே எல்லை பிரச்சனை உள்ள பகுதியாகும். இந்த பகுதியில் ஆக்கிரிமிப்பு செயல்களையும், அத்துமீறல்களையும் தொடர்ந்து சீனா செய்து வருகிறது.

சீன ராணுவம் தொல்லை
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா இராணுவம் கியூஆர்டி படகுகளைப் பெறுவதற்கு முன்பு வரை, அது காலாவதியான மெதுவாக நகரும் படகுகளைத்தான் வைத்து இருந்தது. இந்த படகுகள், இந்திய ராணுவத்தினருக்கு ரோந்து செல்ல மிகவும் கடினமாக இருந்தது. அப்போது சீனாவின் ராணுவத்தினர் இந்திய படகுகளை அதன் கனமான படகுகளுடன் ஓடுவதன் மூலம் முடக்கியது. இதன் பின்னரே இந்திய ராணுவத்திற்கு கியூஆர்டி படகுகள் அனுப்பி வைக்கப்பட்டது.

ஏரியில் ஆக்கிரமிப்பு
இதனிடையே இந்த ஆண்டு மே 5-6 தேதிகளில் சீன ராணுவத்தினர் அதன் வடக்குக் கரையில் மோதின. அதன்பின்னர் சீன ராணுவத்தினர் `ஃபிங்கர் -4 முதல் ஃபிங்கர் -8 '(மலை ஸ்பர்ஸ்) வரையிலான 8 கி.மீ நீளத்தை சீன ஆக்கிரமித்து கொண்டது. ஆதிக்கம் செலுத்துவதற்காக ஏரியின் உயரங்களைக் கட்டுப்படுத்தியது. அத்துடன் இப்பகுதியில் டஜன் கணக்கான புதிய கோட்டைகள், பதுங்கு குழிககளை கட்டியது.

இடைமறிப்பு படகுகள்
தற்போது அனைத்து இந்திய ரோந்துகளும் மேற்கிலிருந்து கிழக்கே பிங்கர் -8 பகுதி வரை செல்வதைத் தடுக்கின்றன, அங்கு உண்மையான கட்டுப்பாட்டு கோடு வடக்கிலிருந்து தெற்கே செல்கிறது. சீனாவின் மக்கள் ராணுவம், தான் ஆக்கிரமித்த பகுதிகளை சீனப் பிரதேசமாகக் கோருவதற்கு இப்பகுதியில் ஒரு பெரிய அடையாளத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் தான் சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரோந்து பணியை தீவிரப்படுத்த புதிய அதிவேக இடைமறிப்பு படகுகளை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர்












Click it and Unblock the Notifications