'சரண்டர் மோடி' ராகுல் காந்தியின் ட்விட்டால் பாஜக கடும் கோபம்.. ட்விட்டரில் டாப் டிரெண்டிங்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி லடாக் தொடர்பாக சீனர்களிடம் 'சரண்டர்' ஆகிவிட்டார் என்று குற்றம் சாட்டி ட்விட் போட்டிருந்தார். இதற்கு பாஜக தலைமை கடுமையாக கோபத்துடன் பதிலடி கொடுத்துள்ளது . இதனிடையே 'சரண்டர் மோடி' என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டாப் டிரெண்டிங் ஆகி உள்ளது.
அண்மையில் அனைத்து கட்சி கூட்டத்தில் சீனா இந்தியா எல்லைப் பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடி பேசுகையில், இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் ஊடுருவவில்லை. இங்குள்ள எல்லைகளையும் அவர்கள் கைப்பற்றவில்லை" எனக் தெரிவித்து இருந்தார்.
இதை கடுமையாக விமர்சித்து இருந்த ராகுல் காந்தி, சனிக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் பகுதியை சீனாவின் தாக்குதலுக்குப் பணிந்து பிரதமர் ஒப்படைத்துவிட்டார். அந்தப் பகுதி சீனப் பகுதியாக இருந்தால் : நமது வீரர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? எந்தப் பகுதியில் அவர்கள் கொல்லப்பட்டனர்?" என்று கேள்வி கேட்டிருந்தார்.

தவறான புரிதல்
இதுதொடர்பாக விளக்கம் அளித்த பிரதமர் அலுவலகம், ``ஜூன் 15-ம் தேதி நடைபெற்ற தாக்குதலுக்குப் பிறகே யாரும் நம் எல்லைக்குள் ஊடுருவவில்லை என பிரதமர் பேசினார். ஆனால், அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது" என விளக்கம் அளித்துள்ளது.

சரண்டர் மோடி
இந்நிலையில் ஜப்பான் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ராகுல் காந்தி பகிர்ந்து இருந்தார், அந்தக் கட்டுரையின் கேப்ஷனில் ``நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி" என்று பதிவிட்டிருந்தார்.

வளைந்து கொடுத்தார்
ஜப்பான் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில், பிரதமர் மோடி பல ஆண்டுகளாக சீனாவுக்காக வளைந்துகொடுத்துவிட்டதாகவும், தற்போது இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறியுள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் சீனா தொடர்பான அவரது அணுகுமுறையை மாற்ற மோடியின் நடவடிக்கை போதுமானதாக இருக்குமா? என்றும் விமர்சித்து கட்டுரை எழுதப்பட்டு இருந்தது. இதைத்தான் ராகுல் காந்தி ஷேர் செய்து சரண்டர் மோடி என குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் சரண்டர் என்ற வார்த்தைக்கு Surender என்று எழுத்து பிழையுடன் குறிப்பிட்டிருந்தார்.

சரணடைதல் வார்த்தை
இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்த டுவிட்டர் பாஜக தலைமையை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. உடனடியாக பாஜக தலைவர்கள் பலர் எதிவினை ஆற்றி உள்ளனர்.
பாஜக தலைவர் ஜே.பி.நதா ராகுல் காந்தியின் வார்த்தைகளை ஒரு பாராட்டாக எடுத்துக் கொண்டாலும், மற்றவர்களும் இதைபார்த்து கோபமடைந்தனர். ராகுல் காந்திக்கு "சரணடைதல்" என்ற எழுத்துப்பிழை வார்த்தையை தான் பாஜகவினர் பலர் கேள்வி எழுப்பி இருந்தனர், மேலும் ராகுல் காந்தி வெற்று வார்த்தைஜாலத்தால் கூச்சலிடுபவர என்று பாஜகவினர் விமர்சித்தனர்.
Recommended Video

நேரு குடும்ப சிறப்பு
பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறுகையில் " 'நரேந்திர மோடி சுரேந்தர் மோடி'. அதாவது மோடி-ஜி மனிதர்களின் தலைவர் மட்டுமல்ல, கடவுள்களும் கூட என்று நீங்கள் சொல்கிறீர்கள்". என்று தெரிவித்து இருந்தார். ஆனால் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கடுமையான டுவிட்டரில் விமர்சித்து இருந்தார். சரணடைதல் காந்தி-நேரு குடும்பத்தின் தனிச்சிறப்பாகும். 1962 ஆம் ஆண்டில், அசாம் கிட்டத்தட்ட நேருவால் வழங்கப்பட்டது. சீன இராணுவம் பொம்டிலாவைக் கைப்பற்றியபோது, நேரு, "என் இதயம் அசாம் மக்களுக்கு செல்கிறது" என்றார். அவமானம்" என்று பதிவிட்டுள்ளார்.
-
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது?












Click it and Unblock the Notifications