ஓய்வுக்கு பின்னர் அரசு பதவி? 'நோ' சொன்ன உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் முன்னாள் நீதிபதிகள் தற்போது ஆளுநர்களாகவும், நியமன எம்பிக்களாகவும், தீர்ப்பாயங்களின் தலைவர்களாகவும் இருக்கின்றனர். இந்நிலையில் நான் ஓய்வு பெற்ற பின்னர் அரசு பதவிகளில் இருக்க மாட்டேன் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தெரிவித்திருக்கிறார்.
தாராப்பூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய கவாய், "ஓய்வுக்குப் பிறகு எந்த அரசாங்கப் பதவியையும் ஏற்க மாட்டேன் என்று முடிவு செய்துள்ளேன். எனக்கு கிடைக்கும் அதிக நேரத்தை தாராப்பூர், அமராவதி மற்றும் நாக்பூரில் செலவிட முயற்சிப்பேன்" என்று கூறியுள்ளார்.

நீதிமன்ற கட்டமைப்புகள் மற்றும் பரவலாக்கம்
தாராபுரத்தில் புதிய நீதிமன்றக் கட்டிடத்தை திறந்து வைத்து, நீதித்துறை உள்கட்டமைப்பு குழுவின் தலைவர் என்ற முறையில், புதிய நீதிமன்ற அமைப்புகளுக்கான மாதிரி ஒன்றை உருவாக்கியதாக கவாய் கூறினார். இந்த முன்மொழிவுகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும், வழக்கு தொடுப்பவர்களுக்கு நீதி அவர்களின் வீட்டு வாசலிலேயே கிடைக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று கூறினார்.
முன்னோடிகளின் பங்களிப்பு
மகாராஷ்டிரா முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் நீதித்துறை உள்கட்டமைப்பு பணிகளில் ஆதரவாக இருந்ததாக கவாய் பாராட்டினார். போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தான் தலைமை நீதிபதியாக இல்லாமல், ஒரு சாதாரண குடிமகனாகவே தாராப்பூருக்கு வந்துள்ளதாகவும் கவாய் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இளநிலை வழக்கறிஞர்கள் தங்கள் வாழ்க்கைப் பாதையை அமைக்க முன்பு பயிற்சி பெற வேண்டும். அனுபவமின்றி உயர்ந்த வாழ்க்கை முறையை எதிர்பார்ப்பது தவறு. அனுபவம் இல்லாமல் மெர்சிடிஸ் அல்லது பிஎம்டபிள்யூ கார் வாங்க நினைப்பவர்கள், அவர்களின் நோக்கம் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இளம் சட்ட பட்டதாரிகள் தங்கள் கர்வத்துடன் இருக்க கூடாது.
மூத்த வழக்கறிஞர்களுக்கு இளநிலை வழக்கறிஞர்கள் மரியாதை கொடுக்க வேண்டும். நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் சமமான பங்காளிகள். அதிகாரம் மக்களுக்கு சேவை செய்வதற்கே" என்று கூறியுள்ளார்.
அவரது தந்தை ஆர்.எஸ். கவாயின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது நினைவு தின நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். தாராப்பூருக்கு செல்லும் வழியில் ஆர்.எஸ். கவாய் பெயரில் கட்டப்படவுள்ள பிரம்மாண்ட நுழைவு வாயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த ஆண்டு மே மாதம் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற கவாய், வரும் நவம்பர் மாதம் 23ம் தேதியுடன் தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து ஓய்வு பெற இருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தில் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ஓய்வு பெற்ற பிறகு மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதேபோல நீதிபதி எஸ் அப்துல் நாசிர் ஓய்வு பெற்ற பிறகு ஆந்திர பிரதேசத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இப்படி ஆளுநராக நியமிக்கப்பட்ட மற்றொரு முன்னாள் நீதிபதி பி.சதாசிவம். இவர் கேரளாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.
மற்றொரு நீதிபதியான ஆதர்ஷ் குமார் கோயில் ஓய்வு பெற்ற அதே நாளில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக பதவி நியமிக்கப்பட்டார். நீதிபதி அருண் மிஸ்டர் ஓய்வு பெற்ற பிறகு தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். நீதிபதி ஹேமந்த் குப்தா ஓய்வு பெற்ற பிறகு டெல்லி சர்வதேச நடுவர் மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications