பாலியல் புகார் வழக்கு.. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன் ஆஜரான தலைமை நீதிபதி.. 1 மணி நேரம் விசாரணை!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு எதிராக சுமத்தப்பட்டு இருக்கும் பாலியல் புகார் தொடர்பான வழக்கின் விசாரணையில் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
Recommended Video
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு எதிராக சுமத்தப்பட்டு இருக்கும் பாலியல் புகார் தொடர்பான வழக்கின் விசாரணையில் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான விசாரணை ஒரு பக்கம் நடந்து கொண்டு உள்ளது.
அதேபோல் இன்னொரு பக்கம் ரஞ்சன் கோகாய்க்கு எதிரான புகார் பொய்யானது, அது சூழ்ச்சி என்று வழக்கறிஞர் பெயின்ஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்த வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

எப்படி விசாரணை
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 35 வயதாகும் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 22 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இது தொடர்பாக அந்த பெண் பிரமாணபத்திரம் அனுப்பி உள்ளார். இந்த புகார், நீதிமன்ற உள்விசாரணையாக நடக்கிறது. நீதிமன்ற விவகாரம் என்பதால் கண்ணியம் காப்பதற்காக உள் விசாரணை நடத்தப்படுகிறது.

ஆஜர் ஆனார்
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்ஏ போப்பே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது. இந்த நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு எதிராக சுமத்தப்பட்டு இருக்கும் பாலியல் புகார் தொடர்பான வழக்கின் விசாரணையில் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். நேற்று சுமார் 1 மணி நேரம் அவர் இந்த விசாரணையில் கலந்து கொண்டார்.

வீடியோ
இந்த விசாரணை மொத்தமும் வீடியோ எடுக்கப்பட்டது. இந்த விசாரணை குறித்த அறிக்கை சீலிடப்பட்ட கவரில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. ஆனால் இந்த விசாரணையில் என்ன விதமான கேள்விகள் எழுப்பப்பட்டது என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகாது.

முடிவு என்ன
இந்த வழக்கில் விசாரணை அடுத்த வாரம் செவ்வாய் கிழமை வரை நடைபெறும். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அதன் மீதான விசாரணையில் ஆஜராக மாட்டேன் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளார். நான் இனி இந்த விசாரணையில் கலந்து கொள்ள மாட்டேன். என்னிடம் அதற்கான தைரியம் கிடையாது என்று இவர் தெரிவித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications