வேலை கிடைச்சுருக்கு! லிங்கை கிளிக் பண்ணுங்க.. ஐஎப்எஸ் அதிகாரிக்கே மெசேஜ்.. மோசடி கும்பல் அட்டூழியம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உங்களுக்கு 9700 சம்பளத்துடன் வேலை கிடைத்திருக்கிறது என்றும்.. இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என்றும் ஐ.எப்.எஸ் அதிகாரிக்கு மோசடி கும்பலினர் மேசேஜ் அனுப்பியுள்ளனர். இந்த மெசேஜை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்ட அவர் 'இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை' என காமெடியாக பதிவிட்டுள்ளது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

அந்தக் காலம் முதல் இந்த நவீன காலம் வரை திருட்டு சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இப்போதுள்ள ஸ்மார்ட் காலத்திற்கு ஏற்ப திருடர்களும் அப்டேட் ஆகிவிட்டனர். ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி கொண்டு திருடுவது, ஆன்லைனில் நமது பாஸ்வேர்டுகளை ஹேக் செய்வது அதன் மூலமாக பணத்தை பறிப்பது என புதுப் புது வழிகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆதார் கார்டு அப்டேட் செய்கிறோம் என...

ஆதார் கார்டு அப்டேட் செய்கிறோம் என...

அதுவும் இப்போதெல்லாம், உங்கள் ஆதார் கார்டு அப்டேட் செய்து தருகிறோம்... என கால் செய்து கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு விவரங்களை கேட்டு ஓடிபி எண்ணை வாங்கி அடுத்த நொடியே பணத்தை ஆட்டையை போட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. தமிழ் தெரியாத வட இந்திய இளைஞர்கள் போல பேசும் சிலர் இத்தகைய கார்டு விவரங்களை கேட்டு 'பல்ப்' வாங்கும் ஆடியோக்கள் கூட சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பரவி நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

பரிசுத்தொகை விழுந்து இருக்கிறது

பரிசுத்தொகை விழுந்து இருக்கிறது

இப்படி தினம் தினம் புதுப்புது வழியில் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ரூம் போட்டு யோசிப்பார்களோ.. என்று எண்ணும் அளவுக்கு நூதன முறையில் மோசடி வலையில் சிக்க வைக்க பல பிளான்களில் மோசடி கும்பல்கள் இயங்கி கொண்டுதான் உள்ளன. அந்த வகையில் சமீப காலமாக உங்களுக்கு பரிசுத்தொகை விழுந்து இருக்கிறது... இந்த லிங்கை கிளிக் பண்ணுங்கள் என்று வரும் மெசேஜ்கள் அதிகரித்து வருகின்றன.

போனை ஹேக் செய்ய..

போனை ஹேக் செய்ய..

இத்தகைய மெசேஜ்களை கிளிக் செய்யும் பட்சத்தில் நமது போனின் ஒட்டுமொத்த கண்ட்ரோல் கூட எதிர்முனையில் இருக்கும் மோசடி கும்பல் கட்டுப்பாட்டிற்கு செல்லும் வகையிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக சைபர் கிரைம் போலீசார் தரப்பிலும் எச்சரிக்கப்படுகிறது. எனவே அடையாளம் தெரியாத எண்களில் இருந்து வரும் இதுபோன்ற மெசேஜ்களை உடனே அழித்து விடுங்கள் என்று சைபர் கிரைம் அதிகாரிகள் கூறும் கருத்தாக உள்ளது.

ஐ.எப்.எஸ் அதிகாரி மெசேஜ்

ஐ.எப்.எஸ் அதிகாரி மெசேஜ்

எனவே இதுபோன்ற மோசடி வலைகளில் சிக்காமல் இருக்க இதுபோன்ற மெசேஜ்களை புறக்கணித்து விட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. நம்மில் பலருக்கும் கூட இந்த மெசேஜ்கள் வந்து இருக்கும். ஆனால், அரசு உயர் அதிகாரிகளையும் இத்தகைய மெசேஜ்கள் விட்டு வைப்பது இல்லை போல் தெரிகிறது. இதை நிரூபிக்கும் வகையில் தான் பிரபல ஐ.எப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வனாவிற்கு இதேபோல ஒரு மெசேஜ் வந்து இருக்கிறது.

காமெடியாக ட்விட்

காமெடியாக ட்விட்

தனக்கு வந்த இந்த மெசேஜை ஸ்க்ரீன் ஷாட் செய்து தனது சமூக வலைத்தளத்திலும் பர்வீன் கஸ்வானா பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். தனது இந்த பதிவோடு.. கடைசியாக வேலை வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.. ஆனால் என்ன செய்வதென்றுதான் குழப்பமாக இருக்கிறது'' என காமெடியாக ட்விட் செய்துள்ளார்.

மின்னஞ்சல்களிலும்.. மெசேஜ் வாயிலாகவும்

மின்னஞ்சல்களிலும்.. மெசேஜ் வாயிலாகவும்

அடுத்த ட்விட்டில் விழிப்புணர்வுடன் இருக்குமாறு எச்சரிக்கை பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதவது.. நண்பர்களே. தற்போது இது போல மோசடியாளர்கள் தொடர்ந்து மின்னஞ்சல்களிலும்.. மெசேஜ் வாயிலாகவும்.. லிங்குகளை அனுப்பி வைக்கின்றனர். இந்த லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். தகவல் திருடு, ஹேக்கிங், நிதி மோசடிகளுக்கு இந்த லிங்குகள் வழிவகுக்கும். கவனமாக இருங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+