இந்தியாவில் 25% அளவுக்கு குறைவான எடையுடன் வளரும் குழந்தைகள்.. காலநிலை மாற்றத்தால் பாதிப்பு!
டெல்லி: காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் குழந்தைகளின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சார்ந்த குழந்தைகள், பாதிக்கப்படாத மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகளை விட 25 சதவீதம் எடை குறைவாக வளர்கின்றனர் என்று ஆய்வுகள் வெளியாகி உள்ளன.
டெல்லியை சேர்ந்த institution of economic growth எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், பிரசவம் மருத்துவமனைகளிலோ அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்திலோ இல்லாமல் வீட்டில் அல்லது வேறு இடத்தில் நடப்பதற்கான வாய்ப்புகள் 38 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

இந்த மாவட்டங்களில் பிறக்கும் குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் வளர்கின்றனர். அதேபோல மந்தமான வளர்ச்சியும் குழந்தைகளிடையே பதிவாகி இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.
இந்தியாவில் சுமார் 80 சதவீத மக்கள் புயல், வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழ்கின்றனர். எனவே இந்தியா சர்வதேச அளவில் வளர்ச்சி அடைய, இந்த காலநிலை பாதிப்புகள் பெரிய தடையாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வானிலை பாதிப்புகளால் இடர்களை எதிர்கொள்ளக்கூடிய மக்கள் வேறு இடத்திற்கு புலம்பெயர்ந்து செல்வது இந்தியாவில் குறைவாக இருப்பதால், காலநிலை மாற்றத்தின் விளைவுகள் இந்தியாவில் மோசமாக எதிரொலிக்கலாம் என்றும் அச்சம் எழுந்திருக்கிறது.
எனவே காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில், அரசு சிறப்பு கவனம் செலுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
அதேபோல காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை, எப்படி கட்டுப்படுத்துவது என்றும், புதை படிம எரிபொருட்களை முடிந்த அளவு எவ்வாறு தவிர்ப்பது என்றும் மத்திய அரசு விஞ்ஞான ரீதியாக ஆலோசனை மேற்கொண்டு அதை அமல்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். சமீபத்தில் காலநிலை மாற்றத்தால் பிரிட்டன் மற்றும் பாகிஸ்தான் கடுமையான பாதிப்புகளை எதிர் கொண்டது.
இந்தியாவிலும் பருவமழை சில நேரங்களில் தீவிரமாகவும், சில நேரங்களில் முற்றிலும் பெய்யாமலும் போய்விடுகிறது. இதற்கும் காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications