ஜம்மு காஷ்மீரில் பயங்கர மேகவெடிப்பு, நிலச்சரிவு.. சிதைந்த கட்டிடங்கள்.. 38 பேர் பலி.. ஷாக் வீடியோ!
காஷ்மீர்: உத்தரகாண்டை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பயங்கர மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேக வெடிப்பால் பெரு மழை கொட்டி தீர்த்ததால், வெள்ளக்காடாக அப்பகுதி மாறியிருக்கிறது. மேலும் காஷ்மீரில் உள்ள சசோத்தி என்ற இடத்தில் நிலச்சரிவும் ஏற்பட்டதால் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளன. அதில் பலர் சிக்கி மாயமாகியுள்ளதாகவும், 38 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என்றும் 133 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ள பாதிப்பில் சிக்கிய மக்களை மீட்பு குழுவினர் மீட்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் சஷோதி பகுதியில் இன்று பிற்பகல் பயங்கர மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மேகவெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் உத்தரகாண்டில் நடைபெற்ற மேக வெடிப்பு ஏற்பட்டு பெருத்த சேதம் ஏற்பட்ட நிலையில், தற்போது இந்தியாவின் வட எல்லை மாநிலமான ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு ஏற்பட்டு உள்ளது.

புனித யாத்திரை செல்லும் இடம்
ஜம்மு காஷ்மீரில் பயங்கர மேக வெடிப்பு நிகழ்வு ஏற்பட்டுள்ளது. மேக வெடிப்பால் பெரு மழை கொட்டி தீர்த்ததால், வெள்ளக்காடாக அப்பகுதி மாறியிருக்கிறது. காஷ்மீரில் உள்ள சசோத்தி என்ற இடத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில் கல் மணலோடு வெள்ளம் அடித்து வரப்பட்டதில் சில வீடுகள், கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளன.
இதில் பலர் சிக்கியிருக்கிலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 38 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 133 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், பலர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வெள்ள பாதிப்பு, நிலச்சரிவில் சிக்கிய மக்களை மீட்பு குழுவினர் மீட்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Cloudburst in Padder, Jammu’s Kishtwar district. On the Machhail Mata route. Praying for everyone’s safety. pic.twitter.com/UvMeRdNVBy
— Manu Khajuria (@KhajuriaManu) August 14, 2025
கிஸ்த்வார் அருகே இமயமலை பகுதியில் இருக்கும் மாதா சந்தி கோவிலுக்கு புனித யாத்திரையாக மக்கள் செல்வது வழக்கம். இந்த புனித யாத்திரையின் துவக்க பகுதியாக சசோதி உள்ளது. இந்த பகுதியில் தான் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேக வெடிப்பு குறித்து, கிஸ்த்வார் துணை ஆணையர் பங்கஷ் சர்மா கூறியதாவது:- "சசோதி பகுதியில் பயங்கர வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மச்சைல் மாதா யாத்திரையின் துவக்க இடம் இதுவாகும். மீட்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
மத்திய அமைச்சர் விளக்கம்
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இது தொடர்பாக கூறுகையில், "மேக வெடிப்பு நிகழ்வை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ஷர்மாவிடம் பேசியுள்ளேன். உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்க கூடும். மீட்பு பணிகளுக்காக படைகள் துரிதமாக அனுப்பப்பட்டுள்ளன. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. எனது அலுவலகம் நேரடியாக உடனுக்கு உடன் தகவல்களை பெற்று வருகிறது. சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்படும்" என்றார்.
கடந்த வாரம் உத்தரகாண்டின் உத்தர் காசி மாவட்டம் தாராலியில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால், ஒரு கிராமமே வெள்ளத்தில் மூழ்கியது. இந்த சம்பங்களில் மயமான பலரை தேடும் பணி தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரிலும் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
38 பேர் பலி?
மேக வெடிப்பால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 38 பேர் வரை பலியாகிருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 133 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், மேலும் பல காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- கிஸ்த்வாரின் சோசிட்டி பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல் வேதனை அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் ஆழ்ந்த இரங்லை தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில மீட்பு படை மற்றும் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிவாரண பணிகளும் நடைபெறுகிறது" என்று கூறியுள்ளார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications