டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் கொரோனா கொத்துக்கொத்தாக பாதிப்பு.. சமூக பரவல் அல்ல.. உலக சுகாதார அமைப்பு விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா சமூக பரவல் என்று சொன்னதில் தவறு நடந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொத்துக்கொத்தாக பரவல் இருப்பதாகவும், ஆனால் சமூக பரவல் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

Recommended Video

    இந்தியா 3வது ஸ்டேஜை எட்டிவிட்டதா? ஐசிஎம்ஆர் ரிப்போர்ட் சொல்வது என்ன?

    இந்தியாவில் 6412 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 199 பேர் இதுவரை கொரோனாவால் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

    Cluster Of Cases In India, Not Community Transmission: WHO

    இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாகி இருப்பதாக கூறியிருந்தது. இந்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. நாட்டில் கொரோனா பரவல் 3ம் நிலை அல்லது சமுதாய பரவலில் இல்லை என்று மத்திய அரசு உறுதியாக மறுத்துள்ளது, இது தொற்றுநோய்கள் அதிகரிக்கும் போது, அதன் மூலத்தை கண்டுபிடிப்பது கடினம் என்றும் 21 நாள் ஊரடங்கு நடவடிக்கை கொரோனா வைரஸ் பரவுவதை மெதுவாக்க உதவியது என்று அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.

    இன்று காலை கூட, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் செய்தியாளர்களை சந்திக்கும் போது இந்தியாவில் "இதுவரை சமூக பரிமாற்றம் இல்லை" என்று கூறினார். கிட்டத்தட்ட 600 மாவட்டங்களில், 400 மாவட்டங்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை, 133 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட்களாக உள்ளன என்றார்.

    இந்நிலையில் இந்தியாவில் கொரோனா சமூக பரவல் என்று சொன்னதில் தவறு நடந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொத்துக்கொத்தாக பரவல் இருப்பதாகவும், ஆனால் சமூக பரவல் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

    English summary
    The World Health Organisation (WHO) has admitted an error in its "situation report" on the coronavirus spread in countries that showed India at the stage of community transmission.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X