டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடடா.. ஸ்டாலின் இவ்வளவு சிம்பிளா.. வெளுத்து வாங்குவாருனு பார்த்தா இது மட்டும் போதும்னு சொல்லிட்டாரே

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கவர விதவிதமாக அசைவத்தில் வெளுத்து வாங்கும் சமையல் கலைஞர்களை அதிகாரிகள் அழைத்து வந்த நிலையில் முதல்வரோ, எனக்கு அசைவம் வேண்டாம், சாம்பாரே போதும் என கூறிவிட்டாராம்.

தமிழகத்தின் கலாச்சாரமாக கருதப்படுவது விருந்தோம்பல். இது மன்னர் காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்படும் மரபு. விருந்தோம்பல் என்றால் தடபுடல் விருந்து என்பதில்லை.

பச்சை தண்ணீரை குடித்தாலும் வந்த விருந்தாளி மனம் கோணாமல் திரும்பி செல்வதுதான் சிறப்பான விருந்தோம்பல். இன்றும் இந்த மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

 ஸ்டாலின் டீமில் ஜான் த்ரே.. செம மூவ்.. தொழிலதிபர்களுக்கு கிளியர் சிக்னல்.. குவியுமா முதலீடுகள்? ஸ்டாலின் டீமில் ஜான் த்ரே.. செம மூவ்.. தொழிலதிபர்களுக்கு கிளியர் சிக்னல்.. குவியுமா முதலீடுகள்?

குறைந்தபட்சம்

குறைந்தபட்சம்

யாராக இருந்தாலும் வீடு தேடி வந்துவிட்டால் குறைந்தபட்சம் காபியோ டீயோ குடிக்க வைத்து அனுப்பாமல் இருக்க மாட்டார்கள். அவ்வாறிருக்க தமிழகத்தின் முதல்வர் இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு செல்கிறார் என்றால் அவருக்கான உபசரிப்புகளை சொல்லவே தேவையில்லை.

ஸ்டாலின்

ஸ்டாலின்

அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றார். அவர் தமிழ்நாடு இல்லத்தில் ஜெயலலிதா தங்கியிருந்த அறையில் தங்கினார். டெல்லி வந்த முதல்வருக்கு என்ன உணவு பிடிக்கும், எதை விரும்பி சாப்பிடுவார் என பரஸ்பரம் அதிகாரிகள் பேசிக் கொண்டனர்.

கார உணவு

கார உணவு

நிச்சயம் அவர் அசைவம் சாப்பிடுவார் என்ற நம்பிக்கையில் அசைவ ஸ்பெஷலிஸ்டுகள் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் முதல்வர் ஸ்டாலினிடம் மெனு கேட்ட போது எனக்கு அசைவ உணவு வேண்டாம், சாதாரண சாம்பார் சாதமே போதும். எண்ணெய் பலகாரமும், கார உணவும் அதிகம் சாப்பிட மாட்டேன் என கூறிவிட்டாராம்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

என்ன முதல்வர் இவர், அநியாயத்திற்கு எளிமையாக இருக்கிறாரே என அதிகாரிகள் ஆச்சரியப்பட்டனராம். அது போல் அவரது மனைவி துர்காவும் சமையல் அறை பக்கமே வரவில்லையாம். முதல்வரை போலவே தமிழக தலைமை செயலாளர் இறையன்புவும் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட வரும் தனக்கு சாம்பார் சாதமே போதும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
CM Stalin likes Sambar rice in Delhi Tamilnadu House when he went there to meet PM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X