தமிழகத்திற்கு ரூ.12659 கோடி தேவை! பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள ரூ.12,659 கோடியை பேரிடர் நிவாரண நிதியாக விடுவிக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் இந்த மழை வேகமெடுத்தது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் சட்டென நிரம்பின. மட்டுமல்லாது அதிலிருந்து வெளியேறிய உபரிநீர் ஊருக்குள் பாய்ந்திருக்கிறது. எனவே இந்த மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இன்று தூத்துக்குடியில் மழை இல்லை என்றாலும் சில இடங்களில் தேங்கி நின்ற வெள்ளம் இன்னும் வடியவில்லை. வெள்ளத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்திருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வெள்ள நிவாரண நிதி தொடர்பான கோரிக்கை முன்வைத்திருக்கிறார். அதாவது, "தமிழகத்தில் மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள ரூ.12,659 கோடியை விடுவிக்க வேண்டும். பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ.2000 கோடியை விடுவிக்க வேண்டும். தற்காலிகமாக ரூ.7033 கோடியை வழங்க வேண்டும். தமிழக வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து,
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 19, 2023
சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள விரைந்து நிதி ஒதுக்கீடு செய்திடக் கோரி மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மாண்புமிகு பிரதமர்… pic.twitter.com/TQpA6u1B5d
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் x சோஷியல் மீடியா தளத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (19.12.2023) புதுதில்லியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்து, மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும், தென் மாவட்டங்களில் தற்போது பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்து, அப்பாதிப்புகளை சீரமைத்திட தேவையான நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு கோரிக்கை மனுவினை (Memorandum) அளித்தார்.












Click it and Unblock the Notifications