இலங்கையில் சீன உளவு கப்பல் யுவான் வாங் 5 .. மெரினாவின் ரேடாரை சரி செய்யும் கடலோர காவல்படையினர்
டெல்லி: இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீனா தங்கள் நாட்டு உளவுக் கப்பலை இலங்கையை நோக்கியுள்ள அனுப்பியுள்ளதால் சென்னை மெரினா கலங்கரை விளக்கத்தில் அமைந்துள்ள ரேடாரை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
சீனாவின் "யுவான் வாங் 5" என்ற உளவு கப்பலை இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் 4 நாட்கள் நிறுத்த சீனா திட்டமிட்டது. இந்த கப்பல் மூலமாக தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுவை, தெலுங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களின் ராணுவ கட்டமைப்புகளை உளவு பார்க்க சீனா திட்டமிட்டுள்ளதாக கருதப்பட்டது.
இதையடுத்து அந்தக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டாம் என அந்தநாட்டு அரசுக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து யுவான் வாங் 5 கப்பலின் வருகையை ரத்து செய்யுமாறு, சீன வெளியுறவுத் துறையிடம் இலங்கை அரசு தெரிவித்தது.

இந்தியாவின் நடவடிக்கை
இந்த விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கையை சீனா விமர்சித்தது. இதுகுறித்து சீனா வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை என்பது இறையாண்மை கொண்ட நாடு. அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியா தேவையில்லாமல் தலையிடுவது முறையல்ல. இலங்கை சீனா இடையே உள்ள உறவில் மூன்றாம் தரப்பு தலையிடுவது தேவையற்ற ஒன்று. உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியா தேவையில்லாமல் தலையிட வேண்டாம் என எச்சரித்துள்ளது.

தென்கிழக்கு
இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை 10 மணி நிலவரப்படி தென்கிழககு ஆசிய நாடான இந்தோனேஷியா கடற்கரைக்கு மேற்கில் மணிக்கு 26 கி.மீ. வேகத்தில் அந்த உளவு கப்ப்ல் இலங்கையை நோக்கி பயணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் உளவு கப்பல் மூலம் 750 கி.மீ. தூரம் உள்ள பகுதிகளை கண்காணிக்க முடியும்.

மெரினா கலங்கரை விளக்கம்
இதனால் சென்னை மெரினா கலங்கரை விளக்கத்தில் அமைந்துள்ள ரேடாரை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். கலங்கரை விளக்கம் ரேடார் பழுதாகிவ 10 நாட்களுக்கு மேல் ஆகியுள்ளது. இந்த நிலையில்தான் கடலோர பகுதியில் கப்பல்கள், படகுகள் நடமாட்டத்தை இந்த ரேடார் துல்லியமாக கண்காணிக்கும்.

இயற்கை மாற்றங்கள்
அதே போல் கடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்களையும் உடனுக்குடன் வீடியோக்களையும் புகைப்படமாகவும் பதிவு செய்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் பணியை ரேடார் மேற்கொள்ளும். சீன கப்பலின் நகர்வுகளை இந்தியா கவனித்து வருகிறது. இந்த உளவு கப்பல் 11,000 டன் பொருட்களை வைத்திருக்கும் திறன் கொண்டுள்ளது.
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications