நாங்களும் வர்றோம்.. ‘இந்தியா' கூட்டணியுடன் கைகோர்த்த கரப்பான்பூச்சி கட்சி.. நவ.1ல் அதிரும் டெல்லி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை ராஜினாமா செய்யக்கோரி டெல்லியில் நவம்பர் 1ம் தேதி 'இந்தியா' கூட்டணி கட்சியினர் பேரணி அறிவித்துள்ளனர். இந்த பேரணிக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முதல் முறையாக ஆதரவு தெரிவித்துள்ளது. இது மத்திய பாஜக அரசுக்கு புதிய சிக்கலாக பார்க்கப்படுகிறது.

cockroach-janta-party-supports-for-india-blocs-november-1-rally-in-delhi

ஏனென்றால் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதற்காக இதுவரை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தனியாகவும், 'இந்தியா' கூட்டணி கட்சியினர் தனியாகவும் போராட்டம் அறிவித்து நடத்தினர்.

தற்போது முதல் முறையாக டெல்லி போராட்டத்தில் 'இந்தியா' கூட்டணியின் அனைத்து கட்சிகளுடன் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி களமிறங்க உள்ளது. இதுதொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அபிஜித் தீப்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

'' யார் வாக்களிக்கலாம் என்பதை அரசு நிர்ணயம் செய்வதை விட மக்கள் தங்களுக்கான அரசாங்கத்தை தேர்வு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தான் ஜனநாயகம் உருவாக்கப்பட்டது. சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவிக்கை என்பது இந்த கொள்கையை சிதைத்துள்ளது. தகுதியான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஞானு (இந்திய தலைமை தேர்தல் ஆணையர்ஞானேஷ் குமார்) கண்டிப்பாக போகவேண்டும். 'இந்தியா' கூட்டணி கட்சியினர் நடத்தும் நவம்பர் 1ம் தேதி பேரணிக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஆதரவு வழங்குகிறது. தேசம் தான் எல்லாவற்றையும் விட உயர்ந்தது. '' என கூறியுள்ளார்.

இதன்மூலம் நவம்பர் 1ல் டெல்லியில் 'இந்தியா' கூட்டணி நடத்தும் பேரணிக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஆதரவு வழங்கி உள்ளது. இந்த கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்கவும் வாய்ப்புள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நவம்பர் 1ம் தேதி 'இந்தியா' கூட்டணி பேரணி அறிவித்தது.

இதற்கு டெல்லி போலீசார் கட்டுப்பாடுகளுடன் தடையில்லா சான்று வழங்கி உள்ளனர். அதன்படி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ராம்லீலா மைதானத்தில் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் மைதானத்துக்கு வெளியே போராட்டம், பேரணி நடத்துவதற்கு அனுமதியில்லை என்று கூறியுள்ளது. இதனால் நவம்பர் 1ம் தேதி ராம்லீலா மைனதாத்தில் எதிர்க்கட்சிகளின் பேரணி உறுதியாகி உள்ளது. இது ஆளும் மத்திய அரசுக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தான் இந்த பேரணியை ஒத்திவைக்க வேண்டும் என்று டெல்லி வர்த்தக சபையினர். ராகுல் காந்திக்கு 2 முறை கடிதம் எழுதி உள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ராம்லீலா மைதானத்தையொட்டி சந்தைகளில் வியாபாரம் அதிகமாக நடக்கும். இந்த சமயத்தில் அங்கு பேரணி அறிவித்து இருப்பது வியாபாரத்தை பாதிக்கும் எனவே பேரணியை நவம்பர் 10ம் தேதிக்கு பிறகு வைத்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. ஆனால் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சியினர் நவம்பர் 1ம் தேதி டெல்லி பேரணி முடிவில் இருந்து பின்வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+