கொல்கத்தா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக தமிழர்.. நெல்லைகாரரை பரிந்துரைத்த கொலீஜியம் - யார் இந்த சிவஞானம்?
தமிழ்நாட்டை சேர்ந்த நீதிபதி டி.எஸ்.சிவஞானத்தை கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
டெல்லி: கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழ்நாட்டை சேர்ந்த நீதிபதி டி.எஸ்.சிவஞானத்தை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்து இருக்கிறது. கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா ஓய்வுபெற்றதை தொடர்ந்து சிவஞானத்தை பரிந்துரைத்துள்ளது கொலீஜியம்.
திருநெல்வேலியை சேர்ந்த சிவஞானம் கடந்த 1963 ஆம் ஆண்டு பிறந்தார். சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் படித்த அவர், மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.
1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் சேர்ந்த அவர் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்துகொண்டு மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தியிடம் பணியாற்றினார். கடந்த 2000 ல் மத்திய அரசின் கூடுதல் சட்ட ஆலோசராக அவர் நியமிக்கப்பட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட சிவஞானம், கடந்த 2011 ஆம் ஆண்டு நிரந்தமாக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்ற கணினி குழுவின் தலைவராகவும் அவர் இருந்தார். அதேபோல் தமிழ்நாடு நீதித்துறை அகாடமி ஆளுநர் குழுவின் உறுப்பினராகவும் அவர் உள்ளார்.

கணினி குழு தலைவர்
இவர் கணினி குழு தலைவராக இருந்த காலத்தில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய சேவை மற்றும் மின்னணு செயல்முறைகளின் கண்காணிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்கீழ் பல்வேறு சேவைகளுக்காக ஸ்மார்ட் போன்கள் வாங்கப்பட்டன. கொரோனா ஊரடங்கு காலத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கு விசாரணை நடத்த மைக்ரோசாப்ட் டீம் உரிமங்கள் அனைத்து நீதிபதிகளுக்கும் வழங்கப்பட்டது.

முக்கிய வழக்குகள்
கனிம சுரங்க வழக்கு, ஸ்டெர்லைட் ஆலை வழக்கு, ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வருமான வரி நோட்டீஸ் வழக்கு என்று பல்வேறு முக்கிய வழக்குகளை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் விசாரித்து உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறார். 2009 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தார்.

தலைமை நீதிபதி
சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்த அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா ஓய்வுபெற்றதை தொடர்ந்து சிவஞானத்தை தலைமை நீதிபதியாக பரிந்துரைத்து இருக்கிறது கொலீஜியம்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications