டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங். அதிரடி.அசோக் கெலாட், கமல்நாத்துக்கு கல்தா- சச்சின், சிந்தியாவுக்கு முதல்வர் வாய்ப்பு?

Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரசின் தலைமை பொறுப்பிற்கு அதிரடி போட்டி போடும் தலைவர்கள்

    டெல்லி: லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் ஆகியோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட உள்ளனர். ராஜஸ்தான் மாநில முதல்வராக சச்சின் பைலட், மத்திய பிரதேச முதல்வராக ஜோதிராதித்யா சிந்தியே நியமிக்கப்படலாம் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

    ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் அமோக வெற்றியை பெற்றது. ஆனால் லோக்சபா தேர்தல்களில் மண்ணைக் கவ்வியது.

    மே.வங்கம், தமிழகத்தில் காவி கொடியா? மத்திய அமைச்சர் பதவியா? அமித்ஷா தேர்வு எது? மே.வங்கம், தமிழகத்தில் காவி கொடியா? மத்திய அமைச்சர் பதவியா? அமித்ஷா தேர்வு எது?

    ராஜினாமா செய்த ராகுல்

    ராஜினாமா செய்த ராகுல்

    வட இந்தியா முழுவதும் படுமோசமான தோல்வியை காங்கிரஸ் சந்தித்துள்ளது. இதனால் வெறுப்படைந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

    மிரட்டிய ப,சி

    மிரட்டிய ப,சி

    ஆனால் காங்கிரஸ் காரிய கமிட்டி இதனை நிராகரித்தது. இருப்பினும் ராகுல் காந்தி தமது முடிவில் பின்வாங்கவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் வாரிசுகளுக்காக மிரட்டி சீட் வாங்கியதிலும் ராகுல் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்.

    ராகுல் வீட்டில் கெலாட், பைலட்

    ராகுல் வீட்டில் கெலாட், பைலட்

    இந்நிலையில் ராகுலை சமாதானப்படுத்தும் முயற்சியில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இறங்கியுள்ளனர். இதனிடையே அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் நேற்று ராகுல் காந்தி வீட்டுக்குச் சென்றனர்.

    கமல்நாத்துக்கு பதில் சிந்தியா

    கமல்நாத்துக்கு பதில் சிந்தியா

    ஆனால் அவர்கள் ராகுலை சந்திக்கவில்லை. இருவரும் பிரியங்காவுடன் ஆலோசனை நடத்தினர். இதேபோல் மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத்தை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. அவருக்குப் பதில் ஜோதிராதித்ய சிந்தியாவை முதல்வராக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.இதனால் இரு மாநில முதல்வர்களும் மாற்றப்படவே வாய்ப்புள்ளது என்கின்றன டெல்லி தகவல்கள்.

    English summary
    Sources said that Congress High Command will sack Rajasthan and Madhya pradesh Chief Misniters.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X