டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீனியர்கள்.. ஜூனியர்கள் அக்கப்போர் ஒருபக்கம்.. விரைவில் கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்? என்கிற விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் - செயற்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.

Recommended Video

    இந்திரா காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வரட்டும் - பிரியங்கா காந்தி

    காங்கிரஸ் இடைக்கால தலைவரான சோனியா காந்தியின் பதவிக் காலம் ஆகஸ்ட் 15-ந் தேதியுடன் நிறைவடைந்தது. சோனியா காந்தி இடைக்கால தலைவராக நீடிப்பாரா? ராகுல் காந்தி மீண்டும் தலைவராவா? என்கிற கேள்விகளுக்கு விடை இல்லை.

    Cong. Working Committee to meet soon

    இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியில் சீனியர்கள், ஜூனியர்கள் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. ராஜஸ்தானில் இதனடிப்படையில் வெடித்த உட்கட்சி பூசல் ஆட்சிக்கே ஆபத்தாக போனது. இப்போதுதான் ஒருவழியாக ஓய்ந்திருக்கிறது.

    இதேபோல் அண்மையில் ராஜ்யசபா எம்.பி.க்கள் கூட்டத்தில் சீனியர்கள், ஜூனியர்கள் பகிரங்கமாக வெடித்தது. ராகுல் காந்தி தலைமையில் ஜூனியர்கள் அணிதிரண்டு நின்றாலும் கட்சி சீனியர்கள் கடிவாளத்துக்கு சிக்காமல் முரண்டு பிடிக்கின்றனர். காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகியதற்கும் இது ஒரு காரணம்.

    அது ஏன் பினராயி விஜயன் எப்பவுமே அது ஏன் பினராயி விஜயன் எப்பவுமே "உர்"ருன்னு இருக்கார்.. சிரிக்கவே தெரியாதா.. அவரே சொன்ன "நச்" பதில்

    இதனிடையே காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை கூட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மறுத்துள்ளனர். மேலும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தொடருக்கான வியூகம் குறித்தும் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என்கின்ற காங்கிரஸ் வட்டாரங்கள்.

    English summary
    Congress Working Committee will meet soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X