‛மின்கட்டணத்துக்கு கூட காசில்லை’.. காங்கிரஸின் வங்கி கணக்குகள் அதிரடி முடக்கம் - அஜய் மக்கான் புகார்
டெல்லி: காங்கிரஸ் கட்சி மற்றும் இளைஞர் காங்கிரஸ் பிரிவின் அனைத்து வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறை முடக்கம் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய பொருளாளர் அஜய் மக்கான் பரபரப்பாக கூறியுள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. கடந்த 2014, 2019 ஆண்டுகளில் மோசமான தோல்வியை சந்தித்த நிலையில் இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என் முனைப்பில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களில் இரட்டை இலக்கத்தில் மட்டுமே தொகுதிகளை வென்ற நிலையில் இந்த முறை மூன்று இலக்கத்தில் தொகுதிகளை வெல்ல வேண்டும் என்ற அடிப்படையில் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி நிச்சயம் கைக்கொடுக்கும் என காங்கிரஸ் கட்சி நினைக்கிறது.

இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் பொருளாளரான அஜன் மக்கான் டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அதாவது காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அஜய் மக்கான் கூறியதாவது:
நாங்கள் வழங்கும் காசோலைகளை வங்கிகள் ஏற்பது இல்லை என்ற தகவல் நேற்று கிடைத்தது. இதுபற்றி விசாரித்தோம். அப்போ தான் இளைஞர் காங்கிரஸுக்கான வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இளைஞர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.210 கோடிக்கு வருமான வரி கட்டும்படி கூறப்பட்டுள்ளது. இந்த மக்களின் நன்கொடை மூலம் கிடைத்த பணமாகம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் எதிர்க்கட்சிளின் வங்கி கணக்கு முடக்கப்படுவது என்பது ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமம'' என்றார்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தேதி இன்னும் 2 வாரங்களில் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்கு முடக்கப்படுவது என்பது ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமம். நாட்டில் ஜனநாயகம் இல்லை அதோடு நாட்டில் ஒற்றை ஆட்சி முறை கொண்டது போன்ற சூழல் உள்ளது. தற்போது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் எங்களின் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மின்கட்டணம் செலுத்தவும் பணம் செலுத்தவும் இயலாத நிலை உருவாகி இருக்கிறது.
இதுமட்டுமின்றி இந்த செயல் என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இருப்பதோடு, நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டை முடக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. இதனால் நீதித்துறை, ஊடகங்களிடம் நியாயம் கேட்கிறோம்'' என பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். '' என்றார்.












Click it and Unblock the Notifications