காணோம்! காணோம்! மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை காணோம்- 'ஜூலி' பாணியில் போஸ்டர் அடித்த காங்கிரஸ்!
டெல்லி: மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை காணவில்லை என காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர்கள் அடித்து ஒட்டி இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.
மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்தனர். பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த மாதம் இறுதியில் இருந்து டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் மல்யுத்த வீரர்களும் இணைந்து கொண்டனர். மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் போராடி, நீண்ட இழுபறிக்குப் பின் பிரிஜ் பூஷண் மீது வழக்கு போடப்பட்டது. ஆனால் பிரிஜ் பூஷணை கைது செய்தாக வேண்டும் என்பது மல்யுத்த வீராங்கனைகளின் கோரிக்கை.
அண்மையில் புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்ட போது ஜந்தர் மந்தரில் இருந்து அகற்றப்பட்டனர் மல்யுத்த வீராங்கனைகள். அங்கிருந்து புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதற்காக அவர்கள் சென்ற போது போலீசாரால் நடுவீதியில் தள்ளிவிடப்பட்டு தாக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையானது. தாங்கள் நாட்டுக்காக வாங்கிய பதக்கங்களை கங்கையில் வீசி எறியப் போவதாக மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அந்த போராட்டத்தை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் நரேஷ் தியாகத் கடைசி நேரத்தில் தடுத்தார்.
இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் மீனாக்ஷி லேகியிடம், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து கேள்வி கேட்க, அவர் தப்பி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் தற்போது மத்திய பெண்கள், குழந்தைகள் நலன் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் அடித்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் ஜல்லிகட்டு போராட்டம் நடந்த போது பிரபலமான சமூக ஆர்வலர் ஜூலி, காணோம்! காணோம்! என அரசியல் தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு முழக்கமிட்டார். அதனை நினைவுபடுத்தும் வகையில் ஸ்மிருதி இரானியை காணவில்லை என்கிற போஸ்டர்கள் இடம்பெற்றிருந்தன.
ஆனாலும் சளைக்காத ஸ்மிருதி இரானி, தாம் அமேதி தொகுதியில்தான் இருக்கிறேன் என்ற பதில் மட்டும் தராமல், முன்னாள் எம்பியை அமெரிக்காவை தொடர்பு கொள்ளுங்கள் எனவும் பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளதை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் ஸ்மிருதி இரானி.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications