நாங்க அப்பவே சொன்னோமே.. இவிஎம் பட்டனை தொட்டாலே பாஜகவுக்கு விழும் 2 ஓட்டு! காங்கிரஸ் புது டிமாண்ட்
டெல்லி: கேரளாவில் மாதிரி ஓட்டுப்பதிவின்போது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 2 ஓட்டுகள் விழுவது தொடர்பான புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ‛‛நாங்கள் தான் அப்பவே சொன்னோமே.. ஆனாலும் தேர்தல் ஆணையம் கேட்கவில்லை'' எனக்கூறி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேட்டை தடுக்க 3 முக்கிய டிமாண்ட்டை காங்கிரஸ் வைத்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை ஒரே கட்டமாக 40 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதேபோல் கேரளாவில் உள்ள 20 லோக்சபா தொகுதிகளுக்ககு வரும் 26ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தான் கேரளாவில் தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாதிரி ஓட்டுப்பதிவும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் காசர்கோடு பகதியில் நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஒருமுறை பட்டனை அழுத்தினால், பாஜகவுக்கு 2 வாக்குகள் விழுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். அதேபோல் மொத்தம் 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இதுபோல் இரட்டை வாக்குகள் பதிவானது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏற்கனவே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து தான் பாஜக வெல்கிறது என தொடர்ந்து கூறி வருகின்றன. மேலும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் விவிபேட் இயந்திரங்களின் ஸ்லீப்பை 100 சதவீதம் எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதையடுத்து கேரளாவில் ஒரு பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவது தொடர்பாக விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தான் மீண்டும் காங்கிரஸ் கட்சி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது சந்தேகத்தை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு தான் ஓட்டு விழுவது கேரளாவில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் தான் ‛‛ராஜாவின் ஆன்மா மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தான் உள்ளது'' என நாங்கள் கூறுகிறோம்.
இதனால் தான் நாங்கள் 3 முக்கிய கோரிக்கைகளை வைக்கிறோம். இதில் முதல் கோரிக்கை என்பது விவிபேட் ஸ்லிப்புகளை கண்டிப்பாக மக்களின் கைகளில் வழங்க வேண்டும். இரண்டாது கோரிக்கை என்பது வாக்காளர்கள் தங்களின் விவிபேட் ஸ்லிப்புகளை தனி பாக்ஸில் செலுத்த வேண்டும். மூன்றாவது கோரிக்கை என்பது தனி பாக்ஸில் செலுத்தப்படும் அனைத்து விவிபேட் ஸ்லிப்புகளையும் 100 சதவீதம் எண்ண வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் பலமுறை வாய்ப்பு கேட்டோம். ஆனால் தேர்தல் ஆணையம் எங்களிடம் பேச தயாராக இல்லை'' என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications