டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவிற்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்.. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

சிபிஐ அமைப்பில் தொடர்ந்து நிறைய சர்ச்சைகள் பிரச்சனைகள் நடந்து வருகிறது. இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷியின் வழக்கில் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து இருக்கிறது.

Congress goes to SC against CBI decision on Alok Vermas compulsory leave

இதனால் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா விடுப்பில் அனுப்பப்பட்டார். சம்பந்தமே இல்லாமல் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவும் இதனால் விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வர் ராவ் அதுவரை சிபிஐ இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.

சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தான் பணியில் இருந்து விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். அதுபற்றிய விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஏகே-47லிருந்து வரும் குண்டு போல பொய் சொல்கிறார்கள்.. எதிர்க்கட்சிகளின் மீது மோடி விமர்சனம்! ஏகே-47லிருந்து வரும் குண்டு போல பொய் சொல்கிறார்கள்.. எதிர்க்கட்சிகளின் மீது மோடி விமர்சனம்!

இந்த நிலையில் அலோக் வெர்மாவிற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி களமிறங்கி உள்ளது. அலோக் வெர்மா கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பாக லோக்சபா எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மனுதாக்கல் செய்துள்ளார். அலோக் வெர்மா முன்பு தொடுத்த வழக்குடன் இந்த வழக்கும் சேர்ந்து விசாரிக்கப்பட வாய்ப்புள்ளது.

English summary
Congress goes to SC against CBI decision on Alok Verma's compulsory leave.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X