ராகுல் காந்தி தகுதிநீக்கம்.. கறுப்புச் சட்டையுடன் முழங்கிய எதிர்க்கட்சிகள்.. முடங்கிய நாடாளுமன்றம்!
டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடங்கியது. ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் கறுப்புச் சட்டையும் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால், லோக் சபா தொடங்கிய 20 வினாடிகளிலும், ராஜ்ய சபா தொடங்கிய ஒரு நிமிடத்திலும் முடங்கியது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன.21ஆம் தேதி தொடங்கியது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற தொடர் தொடங்கிய நிலையில், முதலில் பொருளாதார ஆய்வறிக்கையும் அதன் பிறகு பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது
அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் இப்போது இரண்டு அமர்வுகளாக நடந்து வருகிறது. முதல் அமர்வு கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர்
அவை தொடங்கி 9 நாட்கள் கூட்டம் முடிவடைந்த நிலையில், இன்னும் அவை நடவடிக்கைகள் நடக்கவில்லை. நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் தொடர்ந்து முடங்கியே வருகிறது. இதனால் திட்டமிடப்பட்டிருந்த வகையில் பட்ஜெட் மீதான விவாதம் எதுவும் நடைபெறவில்லை.

9ஆம் நாள் அமர்வு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 9வது நாள் அமர்வு தொடங்கியதும் பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராகுல்காந்தி முதன்முறையாக மக்களவையில் கலந்துக்கொண்டார். அப்போது ராகுல் காந்தி சிறை மற்றும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பி-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

ஆளுங்கட்சியும் அமளி
அதேநேரத்தில் ஆளும் பாஜக எம்பி-க்கள் ராகுல் காந்தி வெளிநாட்டில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவதூறு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ராகுலை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் முழக்கமிட்டனர். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பி-க்களின் கடும் அமளி காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்க கோரி, சபாநாயகர் இருக்கை முன்பு சென்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பி-க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

தகுதிநீக்கம்
இந்த கடும் அமளிக்கு மத்தியில் நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்காததால் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பி-க்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத்தொடர்ந்து திங்கட்கிழமை வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவதூறு வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட்ட ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.

கறுப்பு சட்டையுடன் வந்த காங்கிரஸ் எம்பிக்கள்
இதற்காக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின் மீண்டும் நாடாளுமன்றம் கூடவிருந்த நிலையில், காங்கிரஸ் எம்பி-க்கள் கறுப்புச் சட்டை அணிந்து வர கட்சி மேலிடம் அறிவுறுத்தியது. இந்த நிலையில் காங்கிரஸ் மட்டுமல்லாமல் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பி-க்களும் கறுப்புச் சட்டை அணிந்து நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

முடங்கிய நாடாளுமன்றம்
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கிய சில நேரத்தில் ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்தை கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டன முழக்கங்களை எழுப்பின. இதனைத் தொடர்ந்து லோக் சபா தொடங்கிய 20 வினாடிகளில் மாலை 4 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது . அதேபோல் ராஜ்ய சபா தொடங்கிய ஒரு நிமிடத்தில் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications