ஓயாத ராஜஸ்தான் காங்கிரஸ் மோதல்கள்..'நாட்டாமை’ ராகுல் டெல்லியில் கூட்டிய பஞ்சாயத்து.. ரிசல்ட் என்னவோ?
டெல்லி: சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸில் உச்சகட்ட மோதல்கள் தொடருகிறது. இதனையடுத்து முதல்வர் அசோக் கெலாட், அதிருப்தி தலைவர் சச்சின் பைலட் மற்றும் அமைச்சர்கள் பலரும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி இன்று நடத்தும் ஆலோசனை கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கிறது. பாஜகவோ, காங்கிரஸின் கோஷ்டி பூசல் போதும்.. ஆட்சி தங்கள் வசமாகும் என கனவு காண்கிறது.

காங்கிரஸ் மேலிடமோ தொடர்ந்து ராஜஸ்தான் உட்கட்சி மோதல்களை முடிவுக்கு கொண்டுவரப் போராடுகிறது. அண்மையில் டெல்லியில் முதல்வர் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்டோரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி நேரில் அழைத்து பேசினர். பின்னர் இருதரப்பும் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்கப் போவதாகவும் அறிவித்தனர். ஆனால் ராஜஸ்தான் போய் இறங்கியதும் சச்சின் பைலட் மீண்டும் கலகக் குரல் எழுப்ப தொடங்கினார்.
இந்நிலையில்தான் மீண்டும் டெல்லியில் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனைக்கு அசோக் கெலாட், சச்சின் பைலட் மற்றும் அமைச்சர்களை அழைத்துள்ளது. இன்றைய கூட்டத்துக்குப் பின் ராஜஸ்தான் நிலவரம் மாறும் என்கின்றனர் சீனியர் தலைவர்கள். இன்னொரு பக்கம் சச்சின் பைலட்டை சமாதானப்படுத்தும் வகையிலான முக்கிய அறிவிப்புகளை ராகுல் காந்தி வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications