தாக்குவதை முன்கூட்டியே பாக்.கிடம் கூறிய இந்தியா? ஜெய்சங்கரை விளாசும் காங்கிரஸ் தலைகள்! பாஜக பதிலடி
டெல்லி: பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவது பற்றி பாகிஸ்தானுக்கு முன்பே தெரிவித்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இதனை வைத்து அவரை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. பாகிஸ்தானிடம் நாம் எத்தனை விமானங்களை இழந்தோம் என்று ராகுல் காந்தி கேட்டுள்ளதை போல் பவன் கேராவும் கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவதாக பாஜகவினர் கடும் அட்டாக்கை தொடங்கி உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றது. இதற்கு நம் நாடு கடந்த 7 ம் தேதி பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பிறகு இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்தது. நம் நாட்டின் பதிலடியை தாங்க முடியாமல் பாகிஸ்தான் கதறியது. இதனால் வேறு வழியின்றி போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் கெஞ்சியதால் நம் நாடு ஒப்புக்கொண்டது.

அதன்பிறகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பத்திரிகையாளர் சந்திப்பில், ‛‛ஆபரேஷனுக்கு முன்பாக பயங்கரவாதிகளின் முகாம்களாக உள்ள உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக பாகிஸ்தானுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டது. நாங்கள் ராணுவம் மீது தாக்குதல் நடத்தவில்லை. இதனால் பாகிஸ்தான் ராணுவம் தலையிடாமல் தள்ளி நிற்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர்கள் அதனை விரும்பவில்லை'' என்று கூறியிருந்தார்.
இதனை தற்போது காங்கிரஸ் கேள்வி கேட்டு வருகிறது. கடந்த 17 ம்தேதி ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில்,‛‛ தாக்குதலுக்கு முன்பாகவே அதுபற்றி பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்தது குற்றம். அரசு இதை செய்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனை யார் அங்கீகரித்தார்கள்? இதனால் நம் விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது? '' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு வெளியுறவுத்துறை விளக்கம் அளித்தது. அதில், ‛‛மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே அந்த மெசேஜ் அனுப்பப்பட்டது. ஆனால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கும்போது இந்த மெசேஜ் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் இன்று ராகுல் காந்தி மீண்டும் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இதுபற்றி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மவுனம் என்பது மிகவும் மேசமானது. இதனால் நான் மீண்டும் கேட்கிறேன். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தெரிந்ததால் எத்தனை விமானங்களை நாம் இழந்தோம். இது தவறு அல்ல. இது குற்றம். இந்த நாடு உண்மையை அறிய தகுதியானதாக இருக்கிறது'' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
அதேபோல் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, ‛‛ஜெய்சங்கர் முன்பே தாக்குதல் பற்றி தெரிவிக்காமல் இருந்திருந்தால் பயங்கரவாதிகள் அசாம் மசூத், ஹபிஸ் சையத் உள்ளிட்டவர்கள் தப்பித்து இருக்க முடியுமா? ஜெய்சங்கரின் பேட்டிக்கு பிறகு நாம் உலகம் முழுவதும் கேலி செய்யப்படுகிறோம். இதனால் பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தாக்குதல் தொடர்பாக அளித்த தகவலால் நமக்கு ஏற்பட்ட சேதம் பற்றி பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறி வருகிறார். எத்தனை விமானங்கள் சேதமடைந்தன? நாடு எதிர்கொண்ட சேதம் எவ்வளவு? எவ்வளவு பயங்கரவாதிகள் தப்பினர்? என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பவன் கேராவின் இந்த கேள்விக்கு தற்போது பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக பாஜக தலைரவாக அபர்னா பிசித்யாதவ்,‛‛ காங்கிரஸ் கட்சி நம் நாட்டுக்கான கட்சியா இல்லை பாகிஸ்தானுக்கான கட்சியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்த கட்சியிடம் இருந்து இதுபோன்ற கருத்துகள் தொடர்ந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி நம் நாட்டுக்கு ஆதரவாக இருக்கிறதா? பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறதா? என்பது எனக்கு பரியவில்லை. இந்த சமயத்தில் நம் நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும். காங்கிரஸின் இந்த செயல் துரதிர்ஷ்டவசமானது'' என விமர்சனம் செய்துள்ளார்.
அதேபோல் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ராகுல் காந்தி தனது முந்தைய தவறுகளில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை. அவர் தொடர்ந்து நாட்டுக்கு எதிராக பேசி வருகிறார். இதுதான் காங்கிரஸ் கட்சி உண்மையாக நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் முறையா? அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகரின் கருத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக மே 11ம் தேதி ராணுவ நடவடிக்கையாக டைரக்டர் ஜெனரல் விளக்கம் அளித்துள்ளார்'' என்று சாடியுள்ளார்.
அதேபோல் பாஜகவின் ஐடி விங்கின் தலைவராக உள்ள அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ராகுல் காந்தியின் முட்டாள்தனம் வெறும் தற்செயலான நிகழ்வு மட்டுமல்ல. அது கொடூரமானதாக உள்ளது. ராகுல் காந்தி உண்மையை திரித்து கூறுவதை நிறுத்த வேண்டும். அவர் உண்மையிலயே யாருக்காக பேசுகிறார் என்பது இந்தியாவுக்கு தெரியும்'' என்று கூறியுள்ளார்.
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறுகையில், ‛‛ராகுல்காந்தியின் அறியாமை தற்செயலானது மட்டுமில்லை. அது ஆபத்தானது. பாகிஸ்தான் சார்பு நிலைப்பாட்டில் அவர் இருக்கிறார். 2025 பிப்ரவரியில் அவர் சீன ட்ரோன்களை பாராட்டினார். 2025 மே மாதம் ஆபரேஷன் சிந்தூரின்போது சீன ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியபோது அது தோல்வியடைந்தது. ராகுல் காந்தி ஒன்றும் அறியாதவர் இல்லை. ஆனால் அவர் மற்றவர்களுக்கு உடந்தையாக இருக்கிறார்'' என்றார்.
-
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications