‛‛பாஜக வங்கி கணக்குகளை முடக்குங்கள்’’.. தேர்தல் பத்திர நன்கொடையில் காங்கிரஸ் தலைவர்கள் கொந்தளிப்பு
டெல்லி: தேர்தல் பத்திரம் மூலம் முறைகேடு நடந்திருப்பதாகவும், எனவே இதனை சிறப்பு புலனாய்வு விசாரணை குழு கொண்டு விசாரிக்க வேண்டும், அதுவரை பாஜகவின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது நிறுவனங்கள் ரொக்கமாகவோ, காசோலையாகவோ நன்கொடை கொடுப்பதற்கு பதிலாக, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை மத்திய பாஜக அரசு கடந்த 2018ம் ஆண்டு அமல்படுத்தியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், தேர்தல் பத்திரங்களை ரத்து செய்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.

மட்டுமல்லாது தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை, இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து நேற்று மாலை இந்திய தேர்தல் ஆணையம், எஸ்பிஐ வங்கி வழங்கிய விவரங்களை வெளியிட்டது.
இதில் நிறுவனங்கள் வாங்கிய நன்கொடை பத்திரங்களும், கட்சிகள் நன்கொடை பத்திரங்களை பணமாக மாற்றிய விவரங்களும் இடம்பெற்றிருந்தன. அதன்படி,
கடந்த 2022ம் ஆண்டு அமலாக்கத்துறையின் விசாரணைக்கு உள்ளான, ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் (லாட்டரி மார்ட்டின்) என்ற நிறுவனம் அதிகபட்சமாக தனது இரு நிறுவனங்களின் பெயரில் ரூ.1,350 கோடி மதிப்புடைய தேர்தல் பத்திரங் களை வாங்கியுள்ளது. அதேபோல ஹைதராபாதை சேர்ந்த மெகா என்ஜினீயரிங் ரூ.966 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி தேர்தல் நிதி வசூல்.. பாஜக மீது கார்கே கடும் விமர்சனம்
மேலும் மும்பையைச் சேர்ந்த க்விக் சப்ளை செயின் நிறுவனம் ரூ.410 கோடி, அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனம் ரூ.398 கோடி, சுனில் மிட்டலின் மூன்று நிறுவனங்கள் இணைந்து ரூ.246 கோடி, லக்ஷ்மி நிவாஸ் மிட்டல் ரூ.35 கோடி தேர்தல் பத்திரங்களை வாங்கியிருந்தன.
அதேபோல தேர்தல் பத்திரங்கள் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் ரூ11,733 கோடி நன்கொடையாக அரசியல் கட்சிகள் பெற்றிருக்கின்றன. இதில் பாஜக மட்டும் ரூ.6,566 கோடி பெற்றிருக்கிறது. அதாவது மொத்த தேர்தல் பத்திரங்களில் 58.5% நிதி பாஜவுக்கும் மட்டும் கிடைத்திருந்தது. பாஜக தவிர காங்கிரஸ் ரூ.1,123 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1,092 கோடியும் நன்கொடையாக பெற்றிருக்கிறது.
ஆனால், எந்த நிறுவனங்கள் எந்த கட்சிக்கு எவ்வளவு கொடுத்தன? என்கிற விவரங்கள் வெளியாகவில்லை. இதனை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதேநேரம், பாஜக மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி நன்கொடைகளை பெற்றுள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகர்ஜுன கார்கே, டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர், பாஜகவின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
அதாவது, “பாஜக, தொழிலதிபர்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களையும் மிரட்டி இந்த பணத்தை வாங்கினார்களா அல்லது லஞ்சமா என விசாரணை நடத்த வேண்டும். இதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும். அதுவரை பாஜகவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட வேண்டும்” என மல்லிகர்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
வருமான வரியை திருப்பி செலுத்துவதற்கு தாமதம் ஏற்பட்டதாக கூறி சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியிருந்தது. இந்நிலையில் தற்போது பாஜகவின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications