"இந்தியா" கூட்டணி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு! அடுத்தகட்ட திட்டம் என்ன தெரியுமா
டெல்லி: எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவராகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதையே நீண்ட காலமாகப் பலரும் வலியுறுத்தி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்படிப் பல எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கியது.

இந்தக் கூட்டணிக்கு "இந்தியா" என பெயரிடப்பட்டது. 2024 லோக்சபா தேர்தலுக்கான சீட் பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்கச் சமீபத்தில் முடிவு செய்தது. சீட் பங்கீடு விரைவாக முடிந்தால் தான் முழு வீச்சில் தேர்தலைக் குறிவைத்து பிரச்சாரம் செய்ய முடியும் என்பது அவர்கள் கணக்கு.
இந்தியா கூட்டணி: இதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் சீட் பங்கீடு தொடர்பாக ஒருமித்த கருத்தை எட்டுவதே இலக்காக இருந்தது. ஆனால் அது காங்கிரஸ் கட்சிக்கு அவ்வளவு ஈஸியாக இருக்கவில்லை. தொகுதிப்பங்கீட்டை விரைவாக முடித்து பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும் என நினைத்தாலும் அது இழுபறியாகவே இருக்கிறது
கார்கே தேர்வு: இதற்கிடையே நிதிஷ்குமார் தொடங்கி பலரது பெயர் இதில் அடிப்பட்டது. இதற்கிடையே இதற்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. 'இந்தியா' கூட்டணி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று காணொலி மூலம் நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரவுள்ளது.

நிதிஷ்குமார்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையேற்கலாம் என கூறப்பட்டது. ஆனால் இன்றைய கூட்டத்தில் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்க வேண்டும் என்று நிதிஷ்குமாரே கூறியுள்ளார். அதேபோல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமாரை அறிவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. யாரும் அவரது பெயருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி மற்றும் சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் ஆகியோருடன் விவாதித்து இறுதி முடிவு எடுப்பதாக கார்கே அறிவித்தார். இந்தியா கூட்டணியில் தலைவர் பதவிக்கு அடுத்தபடியாக இந்த ஒருங்கிணைப்பாளர் பதவி இருக்கும் என தெரிகிறது. இன்று நடந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications